என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.74 லட்சத்துக்கு தேங்காய், தேங்காய் பருப்பு விற்பனை
- ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் மற்றும் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம்.
- மொத்தம் ரூ.74 லட்சத்து 74 ஆயிரத்து 755-க்கு விற்பனையானது.
கொடுமுடி:
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் மற்றும் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 715 எண்ணிக்கையிலான ஆயிரத்து 807 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.18.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.29.9 காசுகள், சராசரி விலையாக ரூ.24.96 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.43 ஆயிரத்து 603-க்கு விற்பனையானது.
இதனையடுத்து தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் 695 மூட்டைகள் கொண்ட 34 ஆயிரத்து 47 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.
விற்பனையான பருப்பில்முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.79.9 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.82.99 காசுகள், சராசரி விலையாக ரூ.82.89 காசுகள் என்ற விலைகளிலும்,
2-ம் தரபருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.64.35 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.81.79 காசுகள், சராசரி விலையாக ரூ.76.99 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.26 லட்சத்து 62 ஆயிரத்து 807-க்கு விற்பனையானது.
இதேபோல எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் ஆயிரத்து 292 மூட்டைகள் கொண்ட 60 ஆயிரத்து 4 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.
விற்பனையான பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.81.55 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.83.55 காசுகள், சராசரி விலையாக ரூ.83.15 காசுகள் என்ற விலைகளிலும்,
2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.60.91 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.79.89 காசுகள், சராசரி விலையாக ரூ.75.90 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.47 லட்சத்து 68 ஆயிரத்து 345-க்கு விற்பனையானது.
கொடுமுடி மற்றும் எழுமாத்தூர் ஆகிய 2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் மொத்தம் ரூ.74 லட்சத்து 74 ஆயிரத்து 755-க்கு தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு விற்பனையானது.






