என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கும்கி யானையை காண குவிந்த பொதுமக்கள்
- கும்கி யானையை காண தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் அங்கு குவிந்தனர்.
- வனத்துறையினர் யாரையும் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. சுமார் 300 மீட்டர்தூரத்தில் இருந்து யானையை பார்த்து புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் பொதுமக்கள் மகிழ்ந்தனர்.
தாளவாடி:
தாளவாடி வனச்சர–கத்துக்கு உட்பட்ட இரியபுரம் ,தொட்டகாஜனூர், தர்மாபுரம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய பயிர்களை சேதபடுத்தியும் பொதுமக்களையும் தாக்கி வந்தது.
அந்த யானையை கட்டுப்படுத்த பொள்ளாச்சி ஆணைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி மற்றும் ராஜவர்தன் என்ற 2 கும்கி யானைகள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தாளவாடி அடுத்த இரிபுரம் பகுதிக்கு கொண்டுவரபட்டது.
இந்நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் கும்கி யானையை காண தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் அங்கு குவிந்தனர்.
வனத்துறையினர் யாரையும் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. சுமார் 300 மீட்டர்தூரத்தில் இருந்து யானையை பார்த்து புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் பொதுமக்கள் மகிழ்ந்தனர். காலை முதல் மாலை வரை பொதுமக்கள் ஆவலுடன் வந்து யானையை பார்த்து சென்றனர்.