என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபிசெட்டிபாளையம் பகுதி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு
    X

    கோபிசெட்டிபாளையம் பகுதி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு

    • கோபிசெட்டிபாளையம் பகுதி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்
    • 20 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல்

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொரு ட்கள் விற்கப்ப டுகிறதா என பொது சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். சுகாதார பணி துணை இயக்குநர், ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் நகராட்சி ஆணை யாளர்கள் உத்தரவி ன்படி, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் செல்வம் தலைமை யிலான குழுவினர் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தி ல்குமார் தலைமையிலான குழு வினரும் கடைவீதி மற்றும் அனுமந்தராயன் கோயில் வீதிகளில் உள்ள மொத்த விற்பனை கடை களில் ஆய்வு செய்தனர். இதில் தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் பொரு ட்கள் ஒரு கடையில் விற்ப னைக்கு வைக்க ப்பட்டி ருந்தது கண்டறி யப்பட்டு சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள் கைப்ப ற்றப்ப ட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் ரூ.4 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர். தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்கள் எதுவும் ஆய்வில் கண்டறி யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×