என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்
  X

  அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
  • கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை காலை 11 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

  கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

  கிராமசபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2022 முதல் 31.12.2022 முடிய) குறித்து விவாதித்தல், கிராமஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட 2022-23-ம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தினை டிசம்பர் 31-ந் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதித்தல் மற்றும் இத்திட்டத்தில் சாத்தியமான பணிகள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல்,

  தற்போது உள்ள பணி தொகுப்பின் முன்னேற்றத்தினை பகிர்ந்து கொள்ளுதல், 2022-23-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்றநிலை குறித்து விவாதித்தல், 2023-24-ம் ஆண்டில் புதிதாக தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் மற்றும் வேலை வழங்குவதற்கான தொழிலாளர் மதிப்பீடு இறுதி செய்தல் குறித்து விவாதித்தல்,

  பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடுகணக்கெடுப்பு பணி, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து விளக்குதல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும்.

  அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராமசபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு வட்டாரஅளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சிஅளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  Next Story
  ×