search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்
    X

    தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்

    • வனப்பகுதியில் இருந்து வந்த 10 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்த வாழையை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
    • யானைகளால் 2 ஏக்கர் வாழைகள், 10 தென்னை மரம் சேதமடைந்தது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, மான், கரடி, யானை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வன வில ங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சேஷன்நகர் கிராமத்தை சேர்ந்தவர் வரதப்பன் (47). இவர் தனது 5 ஏக்கர் தோட்டத்தில் நேந்திரம்வாழை சாகுபடி செய்துள்ளார்.

    நேற்று இரவு 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த 10 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்த வாழையை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.

    இதைப்பார்த்த விவசாயி வரதப்பன் பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் அளித்தார். பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து சப்தம் போட்டு யானைகளை துரத்தினர்.

    ஆனால் யானை வனப்பகுதியில் செல்லாமல் வாழையை தொடர்ந்து சேதபடுத்தியது. அதிகாலை 6 மணியளவில் யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது. யானைகளால் 2 ஏக்கர் வாழைகள், 10 தென்னை மரம் சேதமடைந்தது.

    இதனையடுத்து சேதம டைந்த விவசாய ப்பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும், அகலமா கவும் அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×