என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  எலக்ட்ரானிக்ஸ் கடை ஊழியர் மர்மசாவு
  X

  எலக்ட்ரானிக்ஸ் கடை ஊழியர் மர்மசாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காரப்பாடி-குருமந்தூர் சாலையில் நெற்றியில் ரத்தக்காயங்களுடன் அமர்நாத் இறந்து கிடந்தார்.
  • புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையம் காரப்பாடி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் அமர்நாத்(28).

  இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.

  சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக போனில் அவரது பாட்டிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

  ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அமர்நாத் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தனர்.

  இந்நிலையில் காரப்பாடி-குருமந்தூர் சாலையில் நெற்றியில் ரத்தக்காயங்களுடன் அமர்நாத் இறந்து கிடந்தார்.

  இது குறித்து அமர்நாத்தின் சகோதரர் இளவரன் அளித்த புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×