என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி அமாவாசையையொட்டி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
    X

    ஆடி அமாவாசையையொட்டி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    • ஆடி அமாவாசையையொட்டி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
    • இன்று ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவாசையை யொட்டி அந்தியூர் பத்ர காளியம்ம னுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தி யூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற பத்ரகாளி யம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கி ழமைகளில் பக்தர்கள்அதிக அளவில் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள. மேலும் செவ்வாய்க் கிழமை ராகுகால பூஜை வெகு விமர்சையாக இந்த கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவாசையை யொட்டி அந்தியூர் பத்ர காளியம்ம னுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து அம்மன் சந்தன காப்பு சிறப்பு அலங்கா ரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதை யொட்டி இன்று அதிகாலை முதலே ஏராள மான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதையடுத்து ஆடி அமாவாசை தினத்தில் அம்மனை வழி பட்டு தங்களது வேண்டு தல்களை அம்மனிடத்தில் கூறி சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    Next Story
    ×