என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்குவாரி பணியாளர்கள் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம்
- கல்குவாரி பணியாளர்கள் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்
- உரிமையை புதுப்பிக்க கோரிக்கை
நம்பியார்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த மலைய ப்பாளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் பலர் கல் உடைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இங்கு வேலை பார்ப்ப வர்கள் கடந்த 10 வருட ங்களுக்கு முன்பு மகாரா ஷ்டிராவில் கொத்தடி மையாக இருந்து அதன் பிறகு ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே ராஜீவ் காந்தி நகரில் குடியிருந்து கல்குவாரியில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கல்குவாரி உரிமம் புதுப்பி க்காமல் ரத்து செய்ய ப்பட்டது.
இதனை அடுத்து அங்கு வேலை பார்த்த பணியாளர்கள் வேலை யின்றி சிரமம் அடைந்தனர். கல்குவாரி உரிமத்தை புதுப்பிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்ற வில்லை. எனவே கல்குவாரி உரிமத்தை புதுப்பித்து தர வலியுறுத்தி இன்று நம்பியூர் தாலுகா அலுவலகம் முன்பு கல்குவாரியில் பணியாற்றும் சுமார் 70 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கோபி வட்ட கொத்தடி மைகள், கல் உடைப்போர் சங்கத்தை சேர்ந்தவர்கள் திடீரென அமர்ந்து காலை வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, ஓலள க்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட சொத்தபாறை கல்குவாரி யில் எவ்வித வெடிப்பொருட்களும் இல்லாமல் கை உளி கொண்டு கல் உடைத்து பிழைப்பு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். அனுமதி தராதப ட்சத்தில் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு வேறு வேலை ஏற்பாடு செய்து தர வேண்டும். இந்த 2 கோரிக்கைகள் நிறைவேராத பட்சத்தில் எங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைத்து எங்களை எங்கிருந்து கூட்டி வந்தீர்களோ அங்கே திரும்ப விட வேண்டும் என்றனர். உண்ணாவிரத்துக்கு போராட்டத்துக்கு போலீ சார் அனுமதி மறுத்து நிலையில் தாசில்தார் அலுவ லகத்திற்கு சங்கத்தை சேர்ந்த முக்கிய பிரச்சி னைகள் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.






