search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்ட விரோதமாக மது விற்ற 5 பேர் கைது
    X

    சட்ட விரோதமாக மது விற்ற 5 பேர் கைது

    • சட்ட விரோதமாக மது விற்ற 5 பேர் கைது செய்யபட்டனர்
    • 62 மதுபாட்டில்கள் பறிமுதல்

    ஈரோடு,

    பவானி சாகர் போலீசார் புங்கார் காலனி, பவானிசாகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். பின்னர் அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த தனபால் (வயது 50) என்பதும், அவர் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்த 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சென்னிமலை பகுதியை சேர்ந்த பழனிசாமி (62) என்பவர் அப்பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 17 மதுபாட்டில்களை சென்னிமலை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் பழனிசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோபி குப்பைமேடு டாஸ்மாக் அருகே திருட்டு தனமாக மது விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் முத்துராலிங்கம் (37), தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாலு (39) ஆகிேயார் மீது கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர்களிடமிருந்த 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கோபால் (44) என்பவர் முளவாய்க்கால் டாஸ்மாக் அருகே திருட்டு தனமாக மது விற்று கொண்டிருந்தார். அவரை கடத்தூர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கெட்டிசெவியூர் சந்தைகடை அருகே சட்ட விரோதமாக மது விற்ற அக்கரைபாளையம் பழனிசாமி (49) என்பவரை சிறுவளூர் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 6 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காஞ்சிவாணன் (34) தசப்பகவுண்டன்பதூர் அருகே சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்த குற்றத்திற்காக பங்களாபதூர் போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 2 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். வடுகல்பாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து (57) என்பவர் அவரது தோட்டத்தில் தடைசெய்யபட்ட மதுபானங்களை விற்பனைக்காக வைத்திருந்தார். இதையடுத்து வரபாளையம் போலீசார் நாச்சிமுத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×