என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோதமாக மது விற்ற பெண் உள்பட 12 பேர் கைது
    X

    சட்டவிரோதமாக மது விற்ற பெண் உள்பட 12 பேர் கைது

    • பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதேபோல் சோதனையிலும் ஈடுபட்டனர். இதில் ஈரோடு பஸ் நிலையம் அருகில் மது விற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் (34) என்பவரை கைது செய்தனர்.

    கருங்கல்பாளையம் போலீசார் நடத்திய சோதனையில் சுண்ணாம்பு ஓடை பகுதியை சேர்ந்த மல்லிகா (42) என்பவரை கைது செய்தனர்.

    பவானி போலீசார் நடத்திய சோதனையில் சீனிவாசபுரத்தை சேர்ந்த சின்னமணி (34) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல ஆப்பக்கூடல், அம்மாபேட்டை, கோபி, மலையம்பாளையம், கவுந்தப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×