என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 108 மருத்துவ குழுவினர்
    X

    பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 108 மருத்துவ குழுவினர்

    • 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர்கள் பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.
    • அப்போது அழகான பெண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா, யூனிட் நகர் பகுதியை சேர்ந்தவர் குணா. இவரது மனைவி புவனேஸ்வரி (20). 8 மாத கர்ப்பிணியான அவருக்கு காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    அதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    உடனே கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது.

    ஆனால் புவனேஸ்வரிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் ரமேஷ் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பிரியபாரதி பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.

    அப்போது புவனேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர் தாயும்-சேயும் பச்சிளங்குழந்தைகளுக்கான பிரத்யோக ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் ரமேஷ் மற்றும் வாகன ஓட்டுனர் யுவராஜ் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    Next Story
    ×