search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யம்- சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வலியுறுத்தல்
    X

    கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    வேதாரண்யம்- சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வலியுறுத்தல்

    • சென்னைக்கு அகல ரெயில் பாதை அமைத்தும் போக்குவரத்து இயக்கப்படவில்லை.
    • இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் அதிகமாக விரயமாகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தை தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேரில் பாார் ஆய்வு செய்தார். அவரிடம் திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    திருத்துறைப்பூண்டி, வேதாரண்யத்தில் இருந்து வர்த்தகர்களும், வியாபாரிகளும் தொழில் நிமித்தமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் சென்னைக்கு அதிகமாக செல்ல வேண்டியுள்ளது.

    இந்நிலையில், வேதாரண்யம் மற்றும் திருத்து றைப்பூண்டி- அகஸ்தி யம்பள்ளியில் இருந்து சென்னைக்கு அகல ரெயில் பாதை அமைத்தும் ரெயில் போக்குவரத்து இயக்கப்படவில்லை.

    எனவே, அப்பகுதி மக்களும், வணிகர்களும் சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் அதிகமாக விரயமாகிறது.

    அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பின்பும் சென்னைக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கவில்லை என்பது பொதுமக்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக உள்ளது.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக வேதாரண்யம் - சென்னைக்கு திருத்து றைப்பூண்டி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×