search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாக்கடை கால்வாய் நடுவே மின்கம்பம்
    X

    சாக்கடை கால்வாய் நடுேவ உள்ள மின்கம்பம்.

    சாக்கடை கால்வாய் நடுவே மின்கம்பம்

    • சாக்கடை கால்வாய் நடுவே அமைந்திருக்கும் மின்கம்பத்தை மின்சார வாரியத்திடம் கூறி அப்புறப்படுத்த வேண்டும்.
    • நாளடைவில் சாக்கடை ஓட கூட வாய்ப்பில்லாமல் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை பெண்கள் பள்ளியிலிருந்து பெரிய கடைத்தெரு செல்லும் சாலையில் காட்கரேவ் சாஹேப் வீட்டு வாசலில் புதிதாக சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த சாக்கடை கால்வாயின் நடுவே ஏற்கனவே உள்ள மின்கம்பத்தை சுற்றி சிமெண்ட் கட்டை உள்ளது. மின்கம்பத்தில் அடிப்பாகம் மற்றும் சாக்கடை கால்வாயில் பக்கவாட்டு சுவர் என்று நாளடைவில் சாக்கடை ஓட கூட வாய்ப்பில்லாமல் சாக்கடை தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    தற்போது கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் நகராட்சி காண்ட்ராக்டர் இடைஞ்சலாகவும் சாக்கடை கால்வாயில் சாக்கடை ஓடுவதற்கு தடையாகவும் உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தி, அதன் பிறகு பணிகளை தொடராமல் அதை நடுவிலேயே வைத்து பணிகளை தொடர்கின்றனர்.

    ஆனால் அதனை நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி தலைவர் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாய் நடுவே அமைந்திருக்கும் மின்கம்பத்தை மின்சார வாரியத்திடம் கூறி அப்புறப்படுத்தி விட்டு பணிகளை தொடர வேண்டும் என்றும் கடந்த ஆறு மாதமாக நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வாங்கி டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கபடாமல் கிடப்பில் கிடப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.நகராட்சியின் மொத்த ஒப்பந்தத்தையும் ஒரு சில காண்ட்ராக்டர்கள் வைத்து பணிகளை முடிக்க நினைப்பதால் டெண்டர் விடப்பட்ட பணிகளை காண்ட்ராக்ட் காரர்களும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் தவிப்பதாக நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

    Next Story
    ×