என் மலர்
உள்ளூர் செய்திகள்

'101 சோத்தியங்கள்' திரைப்படம் பள்ளிகளில் திரையிடல்- கல்வித்துறை உத்தரவு
- ‘101 சோத்தியங்கள்' என்ற தமிழ் திரைப்படத்தை வருகிற 17-ந் தேதிக்குள் திரையிட வேண்டும்.
- ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும்.
சென்னை:
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்த மாதம் '101 சோத்தியங்கள்' என்ற தமிழ் திரைப்படத்தை வருகிற 17-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) திரையிட வேண்டும்.
இந்த திரைப்படம் கிராமத்தில் வாழும் 12 வயது சிறுவனை பற்றிய கதை ஆகும். 60-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தை கலைஞர் மற்றும் சிறந்த அறிமுக திரைப்படத்துக்கான விருதையும் இந்த படம் வென்றிருக்கிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும். அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் சிறார் திரைப்படத்தை பார்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






