என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வியத்தகு வெற்றியை தந்தவர் துரை வைகோ - ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் அறிக்கை
- 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வியக்க தகுந்த வெற்றியை துரை வைகோ தென் மாவட்டங்களில் பெற்றுத் தந்தார்.
- களத்தில் இறங்கி போராடும் கடைக்கோடி தொண்டர்களின் கண்ணீரில் கலந்தவர் துரை வைகோ என்று ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் கூறியுள்ளார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா காலத்தில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ தனது காரில் காலை - மாலை என 2 வேளைகளிலும் ஏற்றி இறக்கி விட்டார். மாமனிதன் வைகோ என்னும் வரலாற்று ஆவணப்படத்தை தந்து அனைத்து தரப்பு மக்களையும் அவர் கவனிக்க செய்தார்.
தொடர்ந்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வியக்க தகுந்த வெற்றியை தென் மாவட்டங்களில் பெற்றுத் தந்தார். களத்தில் இறங்கி போராடும் கடைக்கோடி தொண்டர்களின் கண்ணீரில் கலந்தவர் துரை வைகோ. ஆனால் அவருக்கு எதிராக கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி பேசி உள்ளார்.
துரை வைகோவின் அளப்பரிய சேவையை அவர் பாராட்ட தவறி உள்ளார். தலைவர் வைகோவுக்கு பொன்விழா எடுக்க முனைந்த போது அதை எதிர்த்தார். ஒரு வார்டு தேர்தலில் கூட தமது கட்சியினர் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார்.
கடந்த 30 வருடங்களாக தொழிற்சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கொண்டு, அதே தொழிற்சங்க சொத்தை கட்சி தொழிற்சங்கத்தில் சேர்க்க மனம் இல்லாத அவர் தற்போது துரை வைகோவை ஏளனமாக பேசுகிறார். அனைத்துக்கும் காலம் பதில் சொல்லும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






