search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளை நவீன முறையில் உருவாக்க நடவடிக்கை - மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு
    X

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்த காட்சி.

    மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளை நவீன முறையில் உருவாக்க நடவடிக்கை - மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

    • சிவந்தாகுளம் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் ,வருகிற கல்வி ஆண்டிலேயே இந்த புதிய வகுப்பறைகளை பயன்படுத்தலாம் என்று மேயர் உறுதி அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகின்றது. எனவே அதனை கருத்தில் கொண்டு மாநகராட்சிக்கு உட்பட்ட சிவந்தாகுளம் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது மேயரை வரவேற்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சிவந்தாகுளம் தொடக்க பள்ளியில் 'ஷெட்' அமைத்து தருமாறும், மேல்நிலை பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களுக்கும் கூடுதல் வகுப்பறை ஒன்று கட்டி தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும், மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் வருகிற கல்வி ஆண்டிலேயே இந்த புதிய வகுப்பறைகளை பயன்படுத்தலாம் என்று மேயர் உறுதி அளித்தார்.

    தொடர்ந்து மேலூர் மாநகராட்சி நடுநிலைபள்ளியில் மேயர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வண்ணம் அதன் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஸ்மார்ட் வகுப்பறையுடன் கூடிய புதிய பள்ளிக் கட்டிடம் ஒன்று அமைத்து தருவதாக ஆசிரியர்களிடம் அவர் உறுதியளித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னின் திராவிட மாடல் ஆட்சியில் அரசு பள்ளி களில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கான கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து பள்ளிகளை நவீன முறையில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பின்னர் திரேஸ்புரம் மீன் மார்கெட் செல்லும் பாதையில் சிமெண்ட் சாலை, தடுப்பு வேலி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது காந்தி இர்வின் உப்பு சங்கம் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு வேலி அமைத்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை நிறைவேற்றி தருவதாக அவர்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி அளித்தார்.

    ஆய்வின்போது மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார்,மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் பாலன், மார்ஷல் உள்ளிட்ட தி.மு.க.வினர் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×