என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலி
- செல்வம் (வயது 48). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்,சாலையை கடக்கும் பொழுதுமோட்டார் சைக்கிள் இவர் மீது பயங்கரமாக மோதியது..
- இதில் செல்வதடசம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் கக்கனூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 48). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார், இவர் நேற்று இரவு சென்னை செல்வதற்காக அரசு பஸ்சில் சென்றார். விக்கிரவாண்டி அருகே உள்ள இரவு ஓட்டலில் பஸ் நின்றபோது பஸ்சை தவற விட்டுவிட்டார்,
பின்னர் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகில் பஸ்சில் ஏறுவதற்காக சாலையை கடக்கும் பொழுது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விக்கிரவாண்டி போலீசார் உடலை கைப்பற்றினர். முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.