search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரமடை ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
    X

    காரமடை ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்

    • மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது.
    • ரெயில் நிலையத்தில் கழிவறை வசதி பூட்டிய நிலையிலேயே உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினசரி 8 முறை பயணிகள் மெமோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயிலில் மேட்டுப்பாளையம், காரமடை, தோலம்பாளையம், சிறுமுகை, வெள்ளியங்காடு, சிக்காரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்காக தினசரி சுமார் 2,000க்கும் அதிகமான பயணிகள் கோவைக்கு சென்று வருகின்றனர்.

    இதன்படி இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. அவ்வாறு காரமடை ெரயில் நிலையத்தில் ெரயிலுக்காக தினசரி 500க்கும் மேற்பட்டோர் வந்து காத்திருந்து ெரயிலில் பயணம் செய்கின்றனர்.

    அப்போது ரெயில் நிலையங்களில் ரெயிலுக்காக காத்திருக்கும் போது பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் குடிநீர் வசதி இல்லை.

    இது மட்டுமல்லாமல் ரெயில் நிலையத்தில் கழிவறை வசதி பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் ரயிலுக்காக வந்து காத்திருக்கும் சிறுவர்கள், முதல் ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் பல இடங்களில் நிழற்கூடைகள் இல்லாததால் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ெரயில் பயணிகள் ெரயில்வே நிர்வா கத்திலும் பலமுறை புகார் தெரி வித்தும் இது வரை எந்த நடவடிக் கையும் எடுக்கப் படவில்லை என கூறப் படுகிறது.

    எனவே இது தொடர் பாக சம்பந் தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து காரமடை ரெயில் நிலை யத்தில் உடன டியாக கழி வறை மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டு மென ரெயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், காரமடை ரெயில் நிலையத்தில் தினசரி ஏராளமான பயணிகள் ெரயிலுக்காக வந்து காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் இங்கு வரும்போது ெரயில் பயணிகள் வசதிக்காக ெரயில் நிலையத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவது கிடையாது. அவசர தேவைக்கு செல்வதற்கு கழிவறைகள் வசதியில்லை. இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

    Next Story
    ×