search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    தூர்வாரும் பணிகளை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்

    • 4 ஆயிரத்து 773 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட உள்ளது.
    • கல்லணை கால்வாயில் தரைத்தளம் சிமெண்டால் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவது.

    பூதலூர்:

    தஞ்சை உள்ளிட்ட 11காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்திற்கு ரூ 80 கோடிக்கு 4004 கிமீ நீரை 636 பணிகள் செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இதில் தஞ்சை மாவட்டத்தில் ரூ 20.46 கோடி மதிப்பீட்டில் 1068.45 கிமீ தொலைவிற்கு நீர் பாசன ஆதாரங்களை தூர்வாரிட ஒப்புதல் வழங்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் ரூ 20.46 கோடியில் 6 கோட்டங்களில் 189 பணிகள் மேற்கொள்ளப்படும். பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்கால் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன பணிக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.27.50 லட்சம் ஆகும். ஆனந்த காவேரி வாய்க்காலில் உள்ளே பொக்ளின் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டு பணிகளை நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    அமைச்சர் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைப்பதற்கு ஏதுவாக ஆனந்த காவேரி வாய்க்காலில் 100மீட்டர் தொலைவிற்கு இரண்டு புறமும் மணல் முட்டைகள் அடுக்கப்பட்டு ஜல்லிகள் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டு இருந்தது.

    பூதலூரில் ஆனந்த காவேரி வாய்க்காலில் தூர்வாரும் பணிகளை கொடியசைத்து தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளிடம் கூறியதாவது. காவிரி டெல்டா 12 மாவட்டங்களுக்கு தூர் வாரும் பணிகளுக்காக ரூ90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    எல்லா வேலைகளையும் ரூ90 கோடியில் செய்ய இயலாது .எது அத்தியாவசியமோ? முக்கியத்துவம் வாய்ந்ததோ அதை எடுத்து செயல்படுத்தப்படும். இங்கே தொடக்கி வைக்கப்பட்டுள்ள ஆனந்த காவேரி வாய்க்கால் தூர் வாரரூ 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக 834 மண்வாரும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 4773 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரப்படஉள்ளது. தூர்வாரம்பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தலைமை பொறியாளர், கலெக்டர் வரை ஆய்வு செய்வார்கள், இதற்கு மேலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவரும் ஆய்வு செய்வார்.

    தூர்வாரும் பணிகளுக்காக இந்த முறை நிதிநிலை அறிக்கையிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .அதனால் தாமதம் இன்றி விரைவாகவே பணிகள் நடைபெறும் .முன்னதாகவே பணிகள் தொடங்கப்பட்டதால் கடைமடை வரை தண்ணீர் சென்றடைவதற்கு வாய்ப்பு ஏற்படும். கல்லணை கால்வாயில் தரைத்தளம் சிமெண்டால் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவது என்று கூறுவது நியாயமானது.

    அதை சரி செய்வதற்கு என்ன வகையில் நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தூர்வாரும் பணிகள் நடைபெறும் பொழுது கால்வாய் தாழ்வாகவும் பாசன வயல்கள் மேடாகி விடுவதால் தண்ணீர் பாய்வதில் சிரமமுள்ளதாக விவசாயி ஒருவர் கேட்ட பொழுது இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு நல்ல நிலையில் இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த நாளில் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் நமக்குள்ள உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுப்பார் என்றும் நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன்தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தீப் சக்சேனா,தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் , தலைமை கொறடா கோவி செழியன், எம் எல் ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், பூண்டி கலைவாணன் , அண்ணாதுரை,தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மேயர்சண் ராமநாதன், தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ,கண்காணிப்பு பொறியாளர் முருகேசன்.

    பூதலூர் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன்,மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். தூர் வாரும் பணிகளை உடனுக்குடன் கண்காணிக்க கண்காணிப்பு செயலியின் செயல் முறையை கண்காணிப்பு அதிகாரி சந்தீப் சக்சேனா அமைச்சரிடம் விளக்கி கூறினார்.

    Next Story
    ×