என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தி.மு.க. தொழிலாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம்
    X

    கோவையில் தி.மு.க. தொழிலாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம்

    • தொழிலாளர் அணி சார்பில் மாநில செயலாளர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு
    • மாநில துணைச் செயலாளர் எல்.பி.எப் தமிழ்ச்செல்வன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்பு

    கோவை,

    தி.மு.க தொழிலாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் செயலாளர் செல்வராஜ் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

    கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடுவது, நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, வருகிற 17-ந் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் தொழிலாளர் அணி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    30- ந் தேதி கழகத் தலைவர் ஆணைக்கு ஏற்ப கோவையில் தொழிலாளர் அணி சார்பில் மாநில செயலாளர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் எல்.பி.எப் தமிழ்ச்செல்வன், வரதன், ராஜகாந்தன், காசி, பாலு, ராஜா, குப்புசாமி, ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×