search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
    X

    தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அன்பில்மகேஸ்பொய்யாமொழி பேசினார்.

    தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்

    • இந்தி மொழி திணிப்பை தொடர்ந்து மேற்கொள்ளும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.
    • ஏழை, எளியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய தி.மு.க. மாவட்டம் பொது உறுப்பி னர்கள் கூட்டம் தஞ்சையில் அவைத்தலைவர்இறைவன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-

    தி.மு.க. தலைவராக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்காக இக்கூட்டம் நன்றி பாராட்டி, தெரிவித்துக்கொள்கின்றது.

    மேலும் பொதுச்செய லாளர், பொருளாளர், முத்னமைச் செயலாளர், துணைப் பொதுச்செய லாளர்களுக்கும் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

    வருகின்ற நவம்பர் 27 அன்று பிறந்த நாள் காணும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் மாதம் முழுவதும் இளைஞரணி சார்பில் ஏழை, எளியோர், மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கிட வேண்டும்,

    இந்தி மொழி திணிப்பை தொடர்ந்து மேற்கொள்ளும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களின் முன்பு இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்படி தஞ்சை தலைமை தபால் நிலையம் (ரயிலடி) முன்பு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பங்கு கொள்ள வேண்டும்.

    ஒன்றிய, மாநகர, பேரூர், ஊராட்சி, கிளை கழக கூட்டம் கூட்டி, கழக பணிகள், கொடியேற்றுதல், அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்திடவும், மற்றும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பொது உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் மாதம் ஒரு முறை செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி அந்த நிகழ்வுகளை மினிட் புத்தகத்தில் பதிவு செய்து மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும்.

    தஞ்சை மத்திய மாவட்டத்தில் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, மாநகர, பேரூர், செயலாளர்கள் சிறப்பாக பணியாற்றிட இக்கூட்டத்தின் வாயிலாக வேண்டுகோளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட துணை செயலாளர் மணிமாறன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, அருளானந்தசாமி, செல்வகுமார், கார்த்திக், முருகானந்தம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் மேத்தா, கார்த்திக்கேயன், சதாசிவம், நீலகண்டன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×