என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வை கண்டித்து விழுப்புரத்தில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்:அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
    X

    உண்ணாவிரதத்திற்கு தலைமை தாங்கிய அமைச்சர் பொன்முடி பேசியபோது எடுத்தபடம். அருகில் அமைச்சர் செஞ்சிமஸ்தான், எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன் மற்றும் பலர் உள்ளனர்.

    நீட் தேர்வை கண்டித்து விழுப்புரத்தில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்:அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் பங்கேற்பு

    • பெற்றோர்கள், கல்வி யாளர்கள், சமூகச் செயற்பா ட்டாளர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
    • இந்த உண்ணா விரதப் போராட்டம் இன்று மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

    விழுப்புரம்:

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க. சார்பில் விழுப்புரத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் இன்று காலை தொடங்கிய உண்ணாவிரதப் போராட்ட த்திற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். இதில் விழுப்புரம் மாவட்ட மாணவ, மாணவி கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பா ட்டாளர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

    உண்ணாவிரதத்தில் விழுப்புரம் மாவட்ட பொரு ளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, நகர சபை தலைவர் தமிழ்செல்வி பிரபு, கோலியனூர் யூனியன் சேர்மன் சச்சி தானந்தம், ஒன்றிய செயலாளர்கள் தெய்வ சிகாமணி, மும்மூர்த்தி, முருகவேல், திருக்கோவிலூர் தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ சேதுநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தினகரன், துணை அமைப் பாளர் பிரேம், மாவட்ட தொண்டர்படை அமைப்பா ளர் கபாலி, மாவட்ட மாண வரனி அமைப்பாளர் வினோத், மாவட்ட மருத்து வரணி செயலாளர் டாக்டர் செந்தில், மாவட்ட வர்த்தக அணி சங்கர், இலக்கிய அணி வல்லப்ப ராசு, நகர இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், துணை அமைப்பாளர் சோமு ஆகியோர் உள்பட ஏராள மானோர் பங்கேற்றுள்ளனர். இந்த உண்ணா விரதப் போராட்டம் இன்று மாலை 5 மணிவரை நடைபெற வுள்ளது.

    Next Story
    ×