என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
நீட் தேர்வை கண்டித்து கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்:எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் பங்கேற்பு
- தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ, தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ, மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், நகர செயலாளர் சுப்பராயலு, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, ஒன்றிய குழு சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், தாமோதரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






