என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை வந்த டி.பி.எம். மைதீன்கானுக்கு பாளை பஸ் நிலையம் அருகே தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தபோது எடுத்த படம்.
பாளையில் தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளருக்கு உற்சாக வரவேற்பு
- முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
- பாளை பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
நெல்லை:
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
தி.மு.க.வினர் வரவேற்பு
அதன் பின்னர் கார் மூலம் நெல்லை வந்த அவருக்கு பாளை பஸ் நிலையம் முன்பு தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் பாளை பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சந்திப்பு மற்றும் மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் சுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ். லட்சுமணன், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் பெருமாள், மேயர் சரவணன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, கோபி என்ற நமச்சிவாயம், மாவட்ட துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன், ஒன்றிய செயலாளர் அருள்மணி, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாதுரை, மாநகர துணை செயலாளர் அப்துல் கையூம், வக்கீல் நவ்ஷாத், இளைஞரணி மணிகண்டன், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






