என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மனைவியுடன் தகராறு:  தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
  X

  மனைவியுடன் தகராறு: தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணிகண்டன் (வயது42) திருமணமான இவர் கடந்த 10 வருடங்களாக வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வந்ததுடன் விடுமுறைக்கு மட்டும் அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்
  • இதனால் கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

  கள்ளக்குறிச்சி:

  திருக்கோவிலூர் அருகே உள்ள பணப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது42) தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகின்ற நிலையில் கடந்த 10 வருடங்களாக வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வந்ததுடன் விடுமுறைக்கு மட்டும் அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மணிகண்டன் கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு திரும்பி வந்திருக்கிறார்.

  அப்போதும் கணவன் -மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டனின் மனைவி சுவிதா கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அன்று முதல் மன வருத்தத்தில் இருந்த மணிகண்டன் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணிகண்டனின் தந்தை கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீசார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் மணிகண்டணின் தற்கொலைக்கான காரணம் என்ன ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×