என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஒரே பெண்ணை 2 பேர் காதலித்ததால் தகராறு: மாயமான கல்லூரி மாணவர் கொன்று புதைக்கப்பட்டது அம்பலம்
    X

    ராஜேந்திரன்

    ஒரே பெண்ணை 2 பேர் காதலித்ததால் தகராறு: மாயமான கல்லூரி மாணவர் கொன்று புதைக்கப்பட்டது அம்பலம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிச்சென்றார்.
    • கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனும், சிறுவனும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள செல்வமருதூர் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 22). மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந் தேதி குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இதுதொடர்பாக திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சிறுவனிடம் விசாரணை

    இந்நிலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த சிறுவன் தனது நண்பரிடம் நான் கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துவார்கள் என நினைத்தேன். ஆனால் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரித்தனர் என்றான்.

    இந்த தகவல் போலீசாருக்கு சென்றது. உடனடியாக வள்ளியூர் டி.எஸ்.பி. லோகேஷ்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ஜோஸ் சிறுவனை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினார்.

    கொன்று புதைப்பு

    அப்போது கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனும், சிறுவனும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர்.

    இதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சம்பவத்தன்று சக நண்பர்களான 2 பேருடன் சேர்ந்து ராஜேந்திரனை தட்டார்மடம் அருகே உள்ள செம்மந்தேரிக்கு அழைத்து சென்று கொன்று புதைத்தது தெரியவந்தது.

    உடல் தோண்டி எடுப்பு

    இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே சாத்தான்குளம் தாசில்தார் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து ராஜேந்திரன் உடலை இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.

    Next Story
    ×