search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு புதிய வேலை- நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்
    X

    நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

    பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு புதிய வேலை- நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்

    • இன்று முதல் வருகிற 18-ந்தேதிக்குள் விருப்ப கடிதம் வழங்க வேண்டும்.
    • காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்க படாது.

    நெல்லை மாவட்ட ஆட்சியிர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மக்கள் நல பணியாளர்களை தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணி ஒருங்கிணைப்பாளராக வேலையில் ஈடுபட அரசு வாய்ப்பளித்துள்ளது.

    இந்த பணிக்காக தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம், கூடுதலாக கிராம ஊராட்சி பணிகளுக்காக ரூ.2,500 ஆக மொத்தம் ரூ.7,500 மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    எனவே 8.11.2011 அன்று பணி இழந்த, புதிய பணியில் சேர விருப்பம் உள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள், தாங்கள் ஏற்கனவே வேலை செய்த யூனியனில் வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ள வேண்டும்.

    ஏற்கனவே பணிபுரிந்ததற்கான விவரத்துடன், புதிய பணியில் சேருவதற்கான விருப்ப கடிதத்தையும் வழங்க வேண்டும். இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 18-ந்தேதிக்குள் (சனிக்கிழமை) விருப்ப கடிதம் வழங்க வேண்டும்.

    அவர்களது விருப்ப கடிதம் பரிசீலிக்கப்பட்டு வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்க படாது.

    எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி 18-ந்தேதிக்குள் விண்ணப்பித்து இந்த பணி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×