என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை பள்ளியில் மாணவர்களுக்கு பேரிடர் கால பயிற்சி
    X

    பாளையில் உள்ள ஒரு பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்


    பாளை பள்ளியில் மாணவர்களுக்கு பேரிடர் கால பயிற்சி

    • நெல்லை மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் பாளை சாந்திநகரில் உள்ள பள்ளியில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
    • இதில் 800 மாணவ- மாணவிகள், 50 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தேசிய பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் பாளை சாந்திநகரில் உள்ள பள்ளியில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

    இதில் 800 மாணவ- மாணவிகள், 50 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் பயிற்சி அளித்தனர்.

    அப்போது பேரிடர் காலங்களில் தற்காத்து கொள்வது எப்படி? வெள்ள காலங்களில் அருகில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக தப்பிப்பது எப்படி? என்பவை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து பேரிடர் தடுப்பு நடவடிக்கை மற்றும் தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

    Next Story
    ×