search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூண்டி மாதா பேராலயத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி புதுப்பிக்கப்பட்டு திறப்பு
    X

    பூண்டி மாதா பேராலயத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    பூண்டி மாதா பேராலயத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி புதுப்பிக்கப்பட்டு திறப்பு

    • பக்தர்கள் தங்குவதற்கு ஆலய நிர்வாகம் அறை வசதிகள் செய்து வருகிறது.
    • 30 அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    பூதலூர்:

    பூண்டி மாதா பேரால யத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.

    ஆண்டு பெருவிழாவில் கலந்து கொள்ள நாடெங்கிலும் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஆலயநிர்வாகம் செய்து வருகிறது.

    ஆலயம் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.ஆலயத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஆலய நிர்வாகம் அறை வசதிகள் செய்து உள்ளது.

    ஆலய வளாகத்தில் கும்பகோணம் முன்னாள் பிஷப் பீட்டர்ரெமிஜியுஸ் பெயரில் அமைந்த 30அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி புதுப்பிக்கப்பட்டு நேற்று காலை புனிதம் செய்து திறந்து வைக்கப்பட்டது.

    கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி புதுப்பிக்கப்பட்ட விடுதியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து புனிதம் செய்தார்.

    இதற்கானகல்வெட்டை மறைமாவட்ட முதன்மைக் குரு அமிர்தசாமி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் பூண்டி பேராலய அதிபர் சாம்சன், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், பேராலயதுணைஅதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ்,ஆன்மீக தந்தை அருளானந்தம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×