என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை அருகே விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
    X

    விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்த மாணவிகள்.


    செங்கோட்டை அருகே விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

    • செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தீவன புல் குறித்த செயல் விளக்க பயிற்சி வழங்கினர்.
    • இதில் சைலேஜ் எவ்வாறு உற்பத்தி செய்வது, அதனை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுப்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தீவன புல் குறித்த செயல் விளக்க பயிற்சி வழங்கினர்.

    இதில் வேளாண் அலுவலர் சரவணன் அறிவுரையின்படி வாசு தேவநல்லூா் தங்கப்பழம் வேளாண் கல்லூரியின் 4-ம் ஆண்டு மாணவிகள் அஞ்சலி, பிருந்தா, பரமேஸ்வரி, ரியா, கண்மணி, மதுமிதா, செல்வமங்கை, சுப்புலட்சுமி, உமினாமீனா ஆகியோர் கிராம தங்கல் பயிற்சியின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு சைலேஜ் குறித்து செயல் விளக்க பயிற்சியினை அளித்தனர்.

    இதில் சைலேஜ் எவ்வாறு உற்பத்தி செய்வது, அதனை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுப்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனா். பயிற்சி முகாமில் திரளான விவசா யிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×