search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரி  ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆதிநாதர் ஆழ்வார் புறப்பாடு
    X

    ஆதிநாதர் ஆழ்வார் தாயாருடன் மற்றும் நம்மாழ்வார் வெட்டிவேர் சப்பரத்தில் வீதி உலா வந்த போது எடுத்தபடம்.

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆதிநாதர் ஆழ்வார் புறப்பாடு

    • விசாக நட்சத்திரம் 10 நாட்கள் மாசி திருவிழாவாக கொண்டாடப்படும்.
    • ஆதிநாதர் ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் வெட்டிவேர் சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்டு மாடவீதி புறப்பாடு நடந்தது.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி கோவில் தலங்களில் 9 -வது ஸ்தலமான ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் பிறந்த திவ்யதேசம், நம்மாழ்வார் விக்ரகம், பொருணை நதி நீரை காய்ச்சி வடித்த நாள் மாசி விசாகமாகும். இந்த ஆண்டு மாசி மாதம் 2 விசாக நட்சத்திரம் வருகிறது.

    இந்த விசாக நட்சத்திரம் 10 நாட்கள் முந்தி மாசி திருவிழாவாக கொண்டாடப்படும். அதன்படி வருகிற மார்ச் மாதம் 1-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    அதற்கு முன்னதாக 2 விசாக நட்சத்திரம் வருவதால் நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு திருமஞ்சனம், 8 மணிக்கு 8.30 மணிக்கு நம்மாழ்வார் ஆதிநாதர் சன்னதி எழுந்தருளினார். பின்னர் 9 மணிக்கு திருவாராதனம். நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி. தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை. 5.30 மணிக்கு ஆதிநாதர் ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் வெட்டிவேர் சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்டு மாடவீதி புறப்பாடு நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×