என் மலர்
உள்ளூர் செய்திகள்

மங்கலம் பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.
நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து மங்கலம்பேட்டையில் ஆர்ப்பாட்டம்
- விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை தேரடி வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கட்சி பிரமுகர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
கடலூர்:
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படிக்கும் மாணவன் சின்னத்துரை, சக மாணவர்களால் வெட்டப் பட்டும், அதனை தடுக்க வந்த அவரது தங்கை சந்திரா செல்வியும் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒருங்கிணைப்பில், பல்வேறு கட்சிகள் சார்பில், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை தேரடி வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய குடியரசு கட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சி,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மனிதநேய வணிகர் சங்கம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி,காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
Next Story






