என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்ம் நடந்தபோது எடுத்த படம்
கோவில்பட்டியில் தேவேந்திர குல வேளாளர் மக்களை பட்டியல் பிரிவில் இருந்து மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
- கோவில்பட்டி வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்த்திற்கு பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்.
கோவில்பட்டி:
தேவேந்திர குல வேளாளர் மக்களை பட்டியல் பிரிவில் இருந்து மாற்றக்கோரி பட்டியல் வெளியேற்ற இயக்கம், கோவில்பட்டி வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கத் தலைவர் மாடசாமி, பொருளாளர் பெரியதுரை, பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்.
பா.ம.க. மாவட்ட அமைப்புச் செயலர் காளிராஜ், தேவேந்திர குல மாநில ஒருங்கிணைப்பாளர் அரிபுத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மாவட்டச் செயலர் ராமச்சந்திரன், பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் சீனி, யோகீஸ்வரர் உறவின் முறைச் சங்கத் தலைவர் கண்ணன், பாஜக மாவட்ட பொறுப்பாளர் அய்யாத்துரைப்பாண்டி யன், பட்டியல் வெளியேற்ற இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணுச்சாமி, நாம் தமிழர் கட்சியின் தொகுதிச் செயலர் ரவிகுமார், மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகத் தலைவர் அன்புராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுப் பேசினார்.






