என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
- இது வரை வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- தயா. பேரின்பம் கலந்து கொண்டு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார்.
கடலூர்:
திட்டக்குடி அருகே சிறுமுளை கிராமத்தில் மதுரை வீரன் கோவிலுக்கு செல்லும் வழியில் சிறுபாலம் மற்றும் சாலை அமைத்து தர வலியுறுத்தியும் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இது வரை வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பஞ்சமி நில மீட்பு மாநில துணை செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர் தயா. பேரின்பம் கலந்து கொண்டு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். இதில் மாநில துணைசெயலாளர் முருகானந்தம்,மங்களூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார் , துணை செயலாளர் சாமிதுரை, கிளை நிர்வாகிகள் இளங்கோவன், மருதாம்பாள், கலைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






