search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடந்தது.

    விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்

    • தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தொடர் கனமழையால் நெல் கொள்முதலில் ஈரப்பதம் 22 சதமாக காலதாமதமின்றி உயர்த்திட வேண்டும்.

    கும்பகோணம்:

    பயிர் காப்பீட்டில் தஞ்சை விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் அநீதியை கண்டித்தும், பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தொடர் கனமழையால் நெல் கொள்முதலில் ஈரப்பதம் 22 சதமாக காலதாமதமின்றி உயர்த்திட வலியுறுத்தியும், நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிடக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருப்பனந்தாள் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கொளஞ்சிநாதன் தலைமை வைத்தார்.

    ஒன்றிய தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட தலைவர் செந்தில்குமார், சிஐடியு துணைத் தலைவர் ஜீவபாரதி, கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் காசிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×