search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்திட வேண்டும்.
    • தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்து நடத்திட வேண்டும்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளை முழக்கமிட்டனர். தேர்தல் வாக்குறுதியின்படி ஊரக வேலை திட்ட வேலை நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்திட வேண்டும். தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூபாய் 100 சேர்த்து ரூபாய் 381 ஆக உயர்த்தி முழுமையாக வழங்கிட வேண்டும்.

    காலை 7 மணிக்கு வேலை தளத்திற்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துவது கைவிட வேண்டும்ஊரக வேலை அட்டைபெற்றுள்ள அனைத்து குடும்பங்க ளுக்கும் முழுமையான வேலை நாட்கள் வேலை அளிக்க வேண்டும்.

    ஊரக வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி வேலை வாய்ப்பை பறிப்பதை கைவிட வேண்டும்.

    தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்து நடத்திட வேண்டும். 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் துவங்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கலியபெருமாள் தலை மையில் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் (அஇவிதொச) பாலையா, சிபிஐ (எம்) ஒன்றிய செயலாளர் ராதா, சுப்ரமணியன், முரளி, சேகர் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    Next Story
    ×