search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகளில் 75-வது சுதந்திர தினவிழாவில் கல்வெட்டுகள் அமைத்து கொடியேற்ற முடிவு
    X

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டபோது எடுத்த படம்.


    கடையம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகளில் 75-வது சுதந்திர தினவிழாவில் கல்வெட்டுகள் அமைத்து கொடியேற்ற முடிவு

    • கடையம் யூனியன் அலுவலக சுவற்றில் போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்க வணிக வளாகம் அமைக்க வேண்டும்.
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைக்கான அட்டையை ஆகஸ்ட் 10-ந் தேதிக்குள் வழங்க அனுமதிக்க வேண்டும்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 23 பஞ்சாயத்துக்களின் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் துப்பாக்குடி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டமைப்பின் தலைவர் டி.கே .பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் பூமிநாத் முன்னிலை வகித்தார். துப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் செண்பகவல்லி ஜெகநாதன் வரவேற்றார்.

    கூட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடைபெறும் பணிகளுக்கான பேக்கேஜ் டெண்டருக்கு ஒப்பந்ததாரரை ஊராட்சி தலைவரே நியமிக்கவும், 75-வது சுதந்திர தின விழாவில் அனைத்து ஊராட்சிகளிலும் கல்வெட்டுகள் அமைத்து கொடியேற்றவும், கடையம் யூனியன் அலுவலக சுவற்றில் போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்க வணிக வளாகம் அமைக்க வேண்டும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைக்கான அட்டையை ஆகஸ்ட் 10-ந் தேதிக்குள் வழங்க அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தெற்கு மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம ராதா ஜெயம் , கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளராக திருமலையப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் அணைந்த பெருமாள்நாடனூர் அழகுதுரை, கடையம் பெரும்பத்து பொன்ஷீலா பரமசிவன், அடைச்சாணி மதியழகன்,பொட்டல்புதூர் கணேசன்,மந்தியூர் கல்யாணசுந்தரம் , ஐந்தாங் கட்டளை முப்புடாதி பெரியசாமி, சிவசைலம் மலர்மதி சங்கரபாண்டியன் ,முதலியார்பட்டி முகைதீன் பீவி அசன்,கடையம் முத்துலட்சுமி ராமதுரை, மேலஆம்பூர் குயிலி லட்சுமணன் , பாப்பான்குளம் முருகன், தர்மபுரம் மடம் ரூகான் ஜன்னத் சதாம், வீராச முத்திரம் பர்வீன் யாகூப், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், கீழ ஆம்பூர் மாரிசுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சேர்வைகாரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×