search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐயாறப்பர் கோவிலில் நித்ய அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்த தருமபுர ஆதீனம்
    X

    தருமபுர ஆதீனம் நித்ய அன்னதானம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஐயாறப்பர் கோவிலில் நித்ய அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்த தருமபுர ஆதீனம்

    • ஐயாறப்பருக்கு பஞ்சமுக அர்ச்சனையும், அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும் செய்யப்பட்டது.
    • தொடர்ந்து கட்டளை மடத்தில் குருமகா சந்நிதானம் கொலுக்காட்சி.

    திருவையாறு:

    தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயிலுக்கு தருமையாதீனத்தின் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் மார்கழி தனுர்மாத தரிசனத்திற்காக வருகை புரிந்தார்.

    இதனை முன்னிட்டு ஐயாறப்பர் மற்றும் அறம்வளர்த்த நாயகி அம்மன், நவக்கிரக சந்நிதி, பாலசுப்ர–மணியர், ஆட்கொண்டார், தென் கயிலாயம் அப்பர் சந்நிதி, வடகயிலாயம் ஆகிய சந்நிதிகளின் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனனை செய்யப்பட்டது.

    மாலையில் குருமகா சந்நிதானத்தின் முன்னிலையில் ஐயாறப்பர் சுவாமிக்கு பஞ்சமுக அர்ச்சனையும் அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும் செய்யப்பட்டது.

    முன்னதாக புஷ்ய மண்டபத்துறை வளாகத்தில் நித்ய அன்னதானத் திட்டத்தை குருமகா சந்நி–தானம் ஏழைகளுக்கு திருவமுது படைத்து தொடக்கி வைத்தார்.

    மாலையில் சுவாமி தரிசனத்தை தொடர்ந்து கட்டளை மடத்தில் குருமகா சந்நிதானம் கொலுக்காட்சி அருளி கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

    Next Story
    ×