search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலர்ஸ் ஜவுளி நிறுவனத்தில்  சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
    X

    விழுப்புரம் கலர்ஸ் ஜவுளி நிறுவன ஊழியர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    கலர்ஸ் ஜவுளி நிறுவனத்தில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

    • விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சைபர் குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சைபர் குற்றங்கள் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன
    • இக்கூட்டம் புதுவை சாலையில் உள்ள பிரபல வணிக வளாகம் மகாலட்சுமி பிளாசாவில் அமைந்துள்ள கலர்ஸ் ஜவுளி நிறுவனத்தில் நடைபெறுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சைபர் குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சைபர் குற்றங்கள் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக விழுப்புரம்-புதுவை சாலையில் உள்ள பிரபல வணிக வளாகம் மகாலட்சுமி பிளாசாவில் அமைந்துள்ள கலர்ஸ் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சைபர் குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மகாலட்சுமி குரூப்ஸ் இயக்குனர்கள் வெங்கடேஷ், பிரகாஷ் ஆகியோர்முன்னிலை வகித்தனர். விழுப்புரம் சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் கலந்து கொண்டு நடைபெற்றது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது கிரெட் கார்டு டெபிட் கார்டு, ஒடீபி, சிவிவி எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பு என வரும் போலி லிங்க் விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். பரிசு விழுந்துள்ளதாக வரும் தகவல்களை பார்த்து ஏமாறாதீர்கள் என்பன போன்று பல்வேறு விழிப்புணர்வுகள் குறித்து விளக்கப்பட்டது.

    குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும் ஊழியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து துண்டு பிரசு ரங்கள் வழங்கப்பட்டது. முடிவில் கலர்ஸ் ஜவுளி மேனேஜர் ரவி நன்றி கூறினார்.

    Next Story
    ×