என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டி கோர்ட்டில் தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இன்று காலை 10 மணிக்கு நேரில் ஆஜரானார்.
    பண்ருட்டி:

    கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி நெப்போலியன், முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி உள்பட 50 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 4-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுப.வீர பாண்டியன், கே.எஸ். அழகிரி ஆகியோர் ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொண்டனர். நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

    டாக்டர் ராமதாஸ் நேற்று பண்ருட்டி கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் ராஜாராம் ஆஜரானார். டாக்டர் ராமதாஸ் வராததற்கான காரணத்தை கூறினார். இதையடுத்து பண்ருட்டி கோர்ட்டில் இன்று (13-ந்தேதி) டாக்டர் ராமதாஸ் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

    அதன்படி டாக்டர் ராமதாஸ் இன்று காலை 10 மணி அளவில் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜரானார். இதையொட்டி கோர்ட்டு முன்பு பா.ம.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
    தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு தொடர்பாக பண்ருட்டி கோர்ட்டில் வேல்முருகன்- சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆஜரானார்கள்.
    பண்ருட்டி:

    2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ. சுப.வீரபாண்டியன், மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் உள்பட 50 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2-ந்தேதி வழக்கு விசாரணை நடைபெற்றது.

    அப்போது ராமதாஸ் மற்றும் திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் ஆஜராகவில்லை.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 12-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    பண்ருட்டி கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுப. வீரபாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.

    டாக்டர்.ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் இன்னும் ஆஜராகவில்லை.

    அரசியல் தலைவர்கள் ஆஜரானதையொட்டி கோர்ட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வழக்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
    பண்ருட்டி:

    2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ.சுப.வீர பாண்டியன், நடிகர் நெப்போலியன் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் உள்பட 50 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2-ந் தேதி வழக்கு விசாரணை நடைபெற்றது.

    அப்போது ராமதாஸ் மற்றும் திருமாவளவன், வேல்முருகன், நடிகர் நெப்போலியன் ஆகியோர் ஆஜராகவில்லை.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 12-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் கோர்ட்டில் ராமதாஸ், திருமாவளவன், நடிகர் நெப்போலியன் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்படி பண்ருட்டி கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுப. வீரபாண்டியன், ஆகியோர் ஆஜரானார்கள்.

    டாக்டர்ராமதாஸ், திருமாவளவன், நடிகர் நெப்போலியன் ஆகியோர் இன்று ஆஜராகவில்லை.

    டாக்டர் ராமதாஸ் சார்பில் வக்கீல் ராஜாராம் ஆஜரானார். அப்போது அவர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை. அவர்மீது போலீசார் பொய்வழக்கு போட்டுள்ளனர்.

    அவர் கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தோம். வழக்கை விசாரித்த நீதிபதி பண்ருட்டி கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் நாளை ஆஜராகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    திருமாவளவன் சார்பில் வக்கீல் தாமரைசெல்வன் ஆஜரானார். அவர் கூறும்போது, பண்ருட்டி கோர்ட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆஜராகின்றனர்.

    இந்த நேரத்தில் திருமாவளவன் கோர்ட்டுக்கு ஆஜராக வந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே அவர் கோர்ட்டில் ஆஜராவதற்கு வேறொரு தேதியை ஒதுக்க வேண்டும். என்று குறிப்பிட்டார்.

    இதையொட்டி வருகிற 18-ந் தேதி பண்ருட்டி கோர்ட்டில் திருமாவளவன் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    நடிகர் நெப்போலியன் சார்பில் அவரது வக்கீல் ஆஜரானார். அவர் கூறும்போது நடிகர் நெப்போலியன் ஆஜராவதற்கு சம்மன் வந்து சேரவில்லை என்று கூறினார். இதையடுத்து வருகிற 18-ந் தேதி நடிகர் நெப்போலியன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அரசியல் தலைவர்கள் ஆஜரானதையொட்டி கோர்ட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது.
    கடலூரிர் இந்திய தேர்தல் ஆணையம் போல் சுதந்திரமான அமைப்பாக செயல்படும் வகையில் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலை மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்தே சந்திப்பது என்று கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து விரிவாக ஆலோசிப்பதற்காக வரும் 16-ந்தேதி விழுப்புரத்தில் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

    உள்ளாட்சியின் அனைத்து நிலையில் உள்ள துணைத்தலைவர் பதவி இடங்களிலும் இடஒதுக்கீடு வேண்டும். சென்னை மாநகராட்சியை தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.

    இதற்கு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்போது அரசு நல்ல பதிலை அளிக்கும் என்று நம்புகிறோம். அதேபோல் நகராட்சி, மாநகராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையை அமலாக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் போல் சுதந்திரமான அமைப்பாக செயல்படும் வகையில் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.

    தமிழக அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பொது, தனித் தொகுதிகளை தேர்வு செய்து தேர்தலை நடத்துவது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

    இதன்படி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள நிலையே தொடரும் என தமிழக அரசு அறிவித்து உள்ளதில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறோம்.

    எனவே, சட்டப்பூர்வமாக தேர்தல் எவ்வாறு நடைபெற வேண்டுமோ, அப்படியே தேர்தலை நடத்த வேண்டும். அதாவது புதிய சுழற்சி முறையிலான ஒதுக்கீட்டின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.

    சுவாதி கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட போது அதனை நாங்கள் வரவேற்றோம். ஆனால் தற்போது கிடைக்கும் நம்பகமான செய்திகள் காவல்துறைக்கு எதிராகவும், சாட்சியம் அளித்ததாக கூறப்படுபவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    எனவே இதில் உண்மையை வெளிக்கொண்டு வரவே சி.பிஐ. விசாரணையை கோரி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிதம்பரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய 6 அடிநீள முதலை பிடிபட்டது. பிடிபட்ட முதலை 150 கிலோ எடை உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் வல்லம்படுகை பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் கிளைவாய்க்கால்கள் வழியாக அருகில் இருக்கும் ஊர்களுக்குள் அவ்வப்போது புகுந்து விடுகின்றன.

    கிராமத்தில் உள்ள கால்நடைகளை கடித்து குதறுகின்றன. மேலும் மனிதர்களையும் கடிப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடனே இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சிதம்பரம் அருகே உள்ள கண்டியாமேடு கிராமத்தில் முத்துக்குமரசாமி என்பவருக்கு சொந்தமான வயலில் 6 அடிநீள முதலை கிடந்தது.

    அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிதம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனச்சரகர் ராஜ்குமார் உத்தரவின்பேரில், வனக்காப்பாளர் ராஜேஷ் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.

    இதையடுத்து, அவர்கள் அங்கு கிடந்த முதலையை போராடி பிடித்தனர். முதலையை வக்ரமாரி நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர். பிடிபட்ட முதலை 150 கிலோ எடை உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
    ஆனி திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்சன விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, மூலவருக்கு ரகசிய பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.

    பின்னர் சாமி புறப்பாடாகி, கோவில் உட்பிரகார வலம் வந்து, தட்சணாமூர்த்தி சன்னதி முன்பு எழுந்தருளினர்.

    இதனை தொடர்ந்து, 21 படி வழியாக கீழவீதி தேர் மண்டபத்துக்கு சுவாமி வந்தடைந்தது. தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.

    முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதனை தொடர்ந்து, சுப்பிரமணியர் தேர் இழுக்கப்பட்டது.

    காலை 9 மணிக்கு மூலவர் நடராஜர் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அப்போது, பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். சிவகாமசுந்தரி மற்றும் சண்டிகேஸ்வரர் தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதியில் 5 தேர்களும் வலம் வந்தன. தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சாமி எழுந்தருளினார். பின்னர், அங்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

    ஆனி திருமஞ்சன மகா தரிசன நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை மூலவர் ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
    மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தேவராஜனுக்கு 2 நாட்கள் பரோலில் சென்றுவர அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது
    கடலூர்:

    மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவராஜன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருடைய மனைவியும், 2 மகள்களும் சென்னையில் தற்கொலை செய்துகொண்ட தகவல் தேவராஜனுக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தனது மனைவி மற்றும் மகள்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் செல்ல அனுமதி கோரி சிதம்பரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதன்பேரில் அவர் 2 நாட்கள் பரோலில் சென்றுவர அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. மீண்டும் அவரை நாளை(திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்குள் சிறையில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவு நகல் வந்ததும், நேற்று இரவு 7.55 மணிக்கு தேவராஜனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஒரு வேனில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
    ×