என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு: பண்ருட்டி கோர்ட்டில் வேல்முருகன்-சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆஜர்
    X

    தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு: பண்ருட்டி கோர்ட்டில் வேல்முருகன்-சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆஜர்

    தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு தொடர்பாக பண்ருட்டி கோர்ட்டில் வேல்முருகன்- சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆஜரானார்கள்.
    பண்ருட்டி:

    2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ. சுப.வீரபாண்டியன், மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் உள்பட 50 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2-ந்தேதி வழக்கு விசாரணை நடைபெற்றது.

    அப்போது ராமதாஸ் மற்றும் திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் ஆஜராகவில்லை.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 12-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    பண்ருட்டி கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுப. வீரபாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.

    டாக்டர்.ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் இன்னும் ஆஜராகவில்லை.

    அரசியல் தலைவர்கள் ஆஜரானதையொட்டி கோர்ட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    Next Story
    ×