என் மலர்tooltip icon

    கடலூர்

    சேத்தியாத்தோப்பு அருகே கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டி மர்ம மனிதர்கள் நகையை பறித்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேலவளையமாதேவி பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி மங்கையர்க்கரசி(40) இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    மாதவனுக்கு மேல வளையமாதேவியில் சிதம்பரம் -விருத்தாசலம் சாலையில் சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டினார். அந்த பகுதியில் வேறு வீடுகள் எதுவும் இல்லை. மாதவன் தனியாக குடும்பத்துடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு மாதவன் தனது மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு அந்த பகுதிக்கு 8 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் கையில் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன.

    கும்பலைச் சேர்ந்தவர்கள் மாதவன் வீட்டுக் கதவை தட்டினர். தூங்கிக்கொண்டிருந்த மாதவன் எழுந்து வீட்டின் கதவை திறந்தார். மர்ம மனிதர்களை பார்த்து நீங்கள் யார்? என்று கேட்டார். உடனே மர்ம மனிதர்களில் ஒருவன் கையில் வைத்திருந்த அரிவாளால் மாதவன் தலையில் ஓங்கி வெட்டினான்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். அலறல் சத்தம் கேட்டு மங்கையர்க்கரசி எழுந்து வெளியே வந்தார். கொள்ளை கும்பல் அவர் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிக்க முயன்றது. மங்கையர்க் கரசி தடுத்தார். இதில் ஆத்திரமடைந்த மர்ம மனிதர்கள் மங்கையர்க் கரசியின் கழுத்து மற்றும் காலில் அரிவாளால் வெட்டினர். ரத்தம் அதிகம் வெளியேறியதால் அவர் மயக்கம் அடைந்தார். கொள்ளை கும்பல் மங்கையர்க் கரசியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டது.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதைபார்த்ததும் கொள்ளை கும்பல் தங்க சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. துணைபோலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் மிதந்த மாதவன், மங்கையர் கரசியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள குளக்கரைக்கு ஓடியது. பின்னர் அங்கிருந்து ஓடி அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றது. அங்கு ஒரு போர்வை கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.

    கொள்ளையர்கள் நகையை கொள்ளையடித்து விட்டு அந்த வழியாக தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். பொதுமக்களும் போலீசாரும் வளையமாதேவியின் பல்வேறு பகுதிக்கு சென்று கொள்ளையர்களை வலைவீசி தேடினார்கள்.

    இந்தநிலையில் வளையமாதேவியில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கரிவெட்டிப் பகுதியில் இன்று அதிகாலை 8 பேர் முள்புதரில் பதுங்கி இருந்தனர். அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களில் 4 பேர் தப்பி ஓடினார்கள். மீதி உள்ள 4 பேரை பொதுமக்கள் பாய்ந்து பிடித்தனர். அவர்களுக்கு தர்மஅடி கொடுத்தனர்.

    பின்னர் அவர்களை சேத்தியாத்தோப்பு போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் வீரமணி அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது பிடிபட்ட கொள்ளையர்கள் அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவன் பெயர் மாதவன் என்றும் தெரியவந்தது. பிடிப்பட்ட கொள்ளையர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    சேத்தியாத்தோப்பு பகுதியில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் வாகன திருட்டுகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டி மர்ம மனிதர்கள் நகையை பறித்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி விசாரணையை 12–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி சட்டசபை தொகுதியில் கடந்த 2011–ம் ஆண்டு தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் நெப்போலியன், முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    கடந்த 13–ந் தேதி விசாரணை நடைபெற்றபோது ராமதாஸ் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

    பின்னர் 25–ந் தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது ராமதாஸ் ஆஜராகவில்லை. இதையடுத்து 29–ந் தேதிக்கு(இன்று) வழக்கு விசாரணையை நீதிபதி சரவணபாபு ஒத்திவைத்தார்.

    அதன்படி இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. கோர்ட்டில் ராமதாஸ் ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் ராஜாராம் ஆஜராகி மனுதாக்கல் செய்தார். அதில் டாக்டர் ராமதாசை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும். வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து பண்ருட்டி கோர்ட்டில் ராமதாஸ் 15 நாட்கள் ஆஜராகவேண்டாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நீதிபதி சரவணபாபு ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை வருகிற 12–ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக பண்ருட்டி கோர்ட்டில் நடிகர் நெப்போலியன் இதுவரை ஆஜராகவில்லை. அவர் அமெரிக்காவில் இருக்கிறார். இதனால் அவருக்கு சம்மன் சென்று சேரவில்லை என்று நீதிபதியிடம் போலீசார் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்திய தூதரகம் மூலமாக அவருக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. அப்போது இடிதாக்கி 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. ஸ்ரீமுஷ்ணம், காட்டு மன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

    சோழதரம் அருகே உள்ள பு.குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 45). விவசாயி. இவரும் அவரது மனைவி அஞ்சாயாளும் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பலத்த மழை கொட்டியதால் அவர்கள் அந்த பகுதியில் உள்ள மரத்தின் அடியில் ஒதுங்கினர். அப்போது திடீரென்று இடி தாக்கியது. இதில் ராமலிங்கம், அஞ்சாயாள் இருவரும் அதே இடத்தில் உடல் கருகி பலியானார்கள்.

    இதுகுறித்து சோழதரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இடிதாக்கி பலியான கணவன்-மனைவி உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இடி தாக்கி இறந்த தம்பதியருக்கு அன்பழகி, பவானி, ராஜவள்ளி ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

    ராஜவள்ளிக்கு திருமணம் ஆகவில்லை. அன்பழகி, பவானி ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. இறந்த தாய்-தந்தையின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பார்ப்பவரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கோவுலாபுரத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்(58). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த தயா, கங்காதரன் ஆகியோருடன் டீக்கடை அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென்று இடிதாக்கியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.

    தயா, கங்காதரன் ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    வரதட்சணை பணம் ரூ.1 லட்சத்தை வாங்கிக்கொண்டு மணமகன் மாயமானதால் நின்றுபோன திருமணத்தால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் பார்த்திபன் (வயது 35). லாரி டிரைவர்.

    இந்த நிலையில் பார்த்திபனுக்கும், சிதம்பரத்தை அடுத்துள்ள கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த துர்காதேவி (25) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    திருமணம் நேற்று (28-ந்தேதி) பண்ருட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. பெண் வீட்டார் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் வரதட்சணையாக பார்த்திபனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தருவதாக பெண் வீட்டில் கூறி இருந்தனர்.

    இதையொட்டி கடந்த 23-ந்தேதி பார்த்திபன் கார்குடி கிராமத்திற்கு சென்றார். அங்கு துர்காதேவியின் தந்தையிடம் மோட்டார் சைக்கிளை நானே வாங்கி கொள்கிறேன். என்னிடம் ரூ.1 லட்சம் கொடுங்கள் என்று கூறினார். இதை நம்பிய பெண் வீட்டார் அவரிடம் பணத்தை கொடுத்தனர்.

    பணத்தை வாங்கிக் கொண்டு சென்ற பார்த்திபனிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த பெண் வீட்டார் பார்த்திபனை தேடி அவரது வீட்டிற்கு நேரில் வந்தனர். மாப்பிள்ளை எங்கே? பலமுறை நாங்கள் அவரை போனில் தொடர்பு கொண்டும் போன் சுவிட்ச் ஆப் என்றே வருகிறது. எங்களிடம் இருந்து ரூ.1 லட்சம் வாங்கி கொண்டு வந்தார்.

    அதன் பின்னர் அவரை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை என பார்த்திபனின் தந்தை கலியபெருமாளிடம் கேட்டனர். அதற்கு கலியபெருமாள் என் பையன் உங்களிடம் இருந்து பணம் வாங்கி சென்றபின்னர் வீட்டிற்கு வரவில்லை. நாங்களும் அவனை பல இடங்களில் தேடினோம். எங்களாலும் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறினர்.

    இந்த பதிலை கேட்ட பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் மகள் திருமணம் நடக்காமல் போய் விடுமோ என்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    இது குறித்து கலியபெருமாள் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபன் யாரையாவது காதலித்தாரா? பணத்தை வாங்கி கொண்டு வேறு எங்கும் அவர் தலைமறைவாகி விட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் மாயமானதால் திருமணம் நின்று போனது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
    கடலூரில் வயிற்றுவலி பிரச்சினை காரணமாக வாலிபர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை கொண்டார்.
    கடலூர்:

    கடலூர் மேற்கு ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 25). விவசாயி. இவருக்கு தீராத வயிற்றுவலி பிரச்சினை இருந்து வந்தது. பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் பலன்இல்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். மனமுடைந்த கமலக்கண்ணன் தனக்கு சொந்தமான நிலத்தில் வைத்து பூச்சி மருந்தை(வி‌ஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் கமலகண்ணனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூரில் அனுமதியின்றி லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த லாட்டரி சீட்டு மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அரசு தடைவிதித்த லாட்டரி சீட்டை விற்பனை செய்வதாக திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் பிள்ளையார் கோவில் அருகே ஒருவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே போலீசாரை பார்த்து அவர் தப்பி ஓட முயன்றனர். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்து 13 லாட்டரி சீட்டுகளையும் ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் விசாரணையில் அவர் கடலூர் முதுநகர் புருக்கீஸ்பேட்டையை சேர்ந்த குமார் என்ற செல்வபாண்டியன்(வயது 49) என்றும் தெரியவந்தது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    கடலூர் திருப்பாதிரி புலியூர் ரெயில் நிலையத்தில் குடிமகன்கள் அட்டூழியத்தால் இளம்பெண்கள் அஞ்சு நடுங்கின்றனர். இதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தை கடந்து பல ரெயில்கள் செல்கின்றன. ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் சில ரெயில் நிற்பதில்லை.

    ஒரு ரெயிலுக்கும் மற்றொரு ரெயிலுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. அதன் பின்னரே மற்ற ரெயில்கள் வருகின்றன. இதனால் பயணிகள் வருகையும் மிகக்குறைவாகவே உள்ளது. மேலும் இரவில் வரக்கூடிய ரெயிலுக்காக ஒரு சில பயணிகளே வருகின்றனர்.

    திருப்பாதிரிப் புலியூர் ரெயில் நிலையம் குடிமகன்களின் மதுக்கடை பாராக மாறியுள்ளது. மாலை மற்றும் இரவு நேரத்தில் குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு ரெயில் நிலையத்துக்கு வருகின்றனர். கூட்டமாக அமர்ந்து மது குடிக்கிறார்கள். அப்போது பொதுமக்கள், பயணிகளுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிக்கொண்டு விசில் அடித்து ரகளை செய்கின்றனர். அந்த வழியாக வரும் பெண்களை கேலி, கிண்டல் செய்கின்றனர்.

    தவறான நோக்கத்தில் பெண்களை நெருங்குகின்றனர். இதனால் ரெயில் பயணிகளும், பெண்களும் ரெயில் நிலையத்திற்கு வருவதற்கு அஞ்சுகின்றனர்.

    இதுகுறித்து குடிமகன்களை யாராவது தட்டிக்கேட்டால் தகராறு ஏற்பட்டு அடி-தடி மோதலில் முடிகிறது. ரெயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் சென்று தட்டிக்கேட்டால் அவர்களை திட்டி மிரட்டுகின்றனர். ரெயில் நிலையத்திலும், ரெயில்வே போலீஸ் நிலையம் இல்லை.

    ரெயில்வே போலீசார் இரவு 11 மணிக்கு மேல் வந்துவிட்டு காலை 6 மணிக்கு சென்று விடுகின்றனர். காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை ரெயில் நிலையத்தில் எந்த பிரச்சினை நடந்தாலும், குற்ற சம்பவங்கள் நடந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் முதுநகர் அல்லது சிதம்பரம் ரெயில்வே போலீசாரிடம் தான் புகார் அளிக்கமுடியும்.

    பின்னர் அவர்கள் இங்கு வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காலதாமதமாகிவிடும். மேலும் ரெயில் வரும் போது பயணிகள் மற்றும் பொதுமக்கள் தண்டவாளம் அருகேயும், ரெயில் அருகேயும், விரைவாக நடந்து செல்கின்றனர். இதனை தடுப்பதற்கும் போலீசார் இல்லை.

    இதுமட்டுமின்றி ஏதேனும் தண்டவாளத்தில் விபத்து ஏற்பட்டு உடல் சிதறிய நிலையில் பிணங்கள் கிடந்தால் அதை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கும் காலதாமதம் ஆகிறது.

    எனவே ரெயில்வே போலீசார் திருப்பாதிரி புலியூர் ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
    கடலூர் துறைமுகத்தில் இருந்து விசைபடகு மற்றும் பைபர் படகுகளுடன் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று கடல் சீற்றம் காரணமாக கரை திரும்பினார்கள்.
    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைகோரி, ராசாப்பேட்டை, சித்திரைபேட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் விசைபடகு மற்றும் பைபர் படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள்.

    இன்று காலை வழக்கம் போல் மீனவர்கள் தங்கள் படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலூரில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனை பொருட்படுத்தாமல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலில் அதிக உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை. அவர்கள் கரைக்கு திரும்பினார்கள்.

    கடல் சீற்றம் குறித்து துறைமுக அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றமாகதான் இருக்கும். இது இயல்பான ஒன்றாகும். மேலும் வடகிழக்கு பருவநிலையில் இருந்து தென்மேற்கு பருவநிலைக்கு மாற்றம் ஏற்படுவதனால் இதுபோல் கடல் சீற்றம் ஏற்படும்.

    இது புயல் தோன்றுவதற்கான அறிகுறி கிடையாது. இதனால் மீனவர்கள் யாரும் அச்சப்படதேவையில்லை என்றார்.
    கடல் சீற்றத்தின் காரணமாக திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் மீனவர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    கடலூர்:

    கடலூர் அம்பலவாணன் பேட்டையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசிப்பவர்கள் குணசேகரன் (வயது 40), சசிகுமார் என்ற ராஜன் (32). மீனவர்கள்.

    இவர்கள் 2 பேரும் இன்று காலை கடலில் மீன்பிடிப்பதற்காக படகில் சென்றனர். அந்த நேரத்தில் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்து. திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. குணசேகரனும், சசிகுமாரும் கடலில் மூழ்கினர். இதில் சசிகுமார் நீந்தி கரை சேர்ந்தார். குணசேகரன் நீச்சல் அடித்து கரைக்கு வர முயன்றார். அவரது முயற்சிக்கு பலன் இல்லை.

    சிறிது நேரத்தில் கடலில் மூழ்கி குணசேகரன் பரிதாபமாக இறந்தார். கரை திரும்பிய சசிகுமார் இதுகுறித்து ஊர் பிரமுகர்களிடம் கூறினார். அவர்கள் கடற்கரைக்கு சென்றனர். அங்கு குணசேகரனின் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறிதுடித்தது கல் நெஞ்சையும் கரையவைப்பதாக இருந்தது.

    கடலூரில் இன்று மீனவர் கடல் அலையில் சிக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரும்பு நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவோம் என கரும்பு விவசாயிகள் கூட்டு குழு இயக்கத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய ஏராளமான விவசாயிகளுக்கு அதற்கான நிலுவை தொகை வழங்கப்படவில்லை. இதனால் சோழத்தரம், ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை, கானூர், பேரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கூட்டு குழு இயக்கம் சார்பில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஆண்டவர்செல்வம் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் இளவரசன், அண்ணாதுரை, தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தில்ராயர் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    2015-16-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.2,750 வீதம் தரவேண்டிய நிலுவை தொகை ரூ.27 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். 2014-2015-ம் ஆண்டு அரவை பருவத்தில் கரும்பிற்கான மாநில அரசு பரிந்துரை செய்த நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். 2004-2005 மற்றும் 2008-2009-ம் ஆண்டுகளுக்கான லாபத்தில் பங்கு தொகையான ரூ.5 கோடியே 14 லட்சத்தை நீதிமன்ற உத்தரவுப்படி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    ஆலையில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். ஆலையின் நுழைவு வாயில் முதல் எடை மேடை வரை, கரும்பு தளம் மற்றும் தார் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) சோழத்தரம் கடைவீதியில் விவசாயிகள் அரை நிர்வாணமாக பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவோம்.

    மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ராஜதுரை, வெற்றிவேல், வையாபுரி, ராயர், முருகானந்தம், செந்தில்குமார், ராமசிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தேர்தல் விதிமுறைகள் மீறி பிரசாரம் செய்ததாக திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பண்ருட்டி கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தபோது திருமாவளவன் ஆஜராகவில்லை

    பண்ருட்டி:

    கடந்த 2011–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்போது, பண்ருட்டி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி, நடிகர் நெப்போலியன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு பண்ருட்டி 1–வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 18–ந் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஆஜரானார். வழக்கை நீதிபதி சரவணபாபு விசாரித்து விசாரணையை 27–ந் தேதிக்கு(இன்று) ஒத்திவைத்து அன்றைய தினம் திருமாவளவன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ஆனால் திருமாவளவன் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் தாமரைசெல்வன் ஆஜராகி மனுதாக்கல் செய்தார். அதில் திருமாவளவனுக்கு உடல்நலம் சரியில்லை அதனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

    கடலூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அப்துல்கலாம் சிலையை போலீசார் அகற்றியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாற்று ரோட்டில் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தின் நுழைவுவாயில் முன்பு மஞ்சக்குப்பம் இளைஞர்கள் மன்றம் சார்பில் 4 அடி உயர பீடம் அமைக்கப்பட்டு அதில் 2 அடி உயர அப்துல்கலாம் சிலை அமைக்கப்பட்டது.

    அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி இன்று அந்தசிலை திறக்கப்பட்டது. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அனுமதியின்றி இந்த சிலை வைக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் அன்பழகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், கிராம நிர்வாக அதிகாரி அறிவழகன் வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    மஞ்சக்குப்பம் இளைஞர் மன்ற நிர்வாகிகளிடம் அனுமதியின்றி சிலை வைத்தது தவறு என்று எடுத்து கூறினார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் அனுமதி கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

    அனுமதியின்றி சிலை வைக்கக்கூடாது என்று போலீசார் கூறினார்கள். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அப்துல்கலாம் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. பீடத்தை வருவாய் துறை ஊழியர்கள் அகற்றினர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×