என் மலர்
கடலூர்
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை கிராமத்தில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கொழை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், அதிகாரிகளை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி ஸ்ரீமுஷ்ணம்-சேத்தியாத்தோப்பு நெடுஞ்சாலையில் நாச்சியார்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சாலை கொழை கிராமத்தை சேர்ந்த 53 பெண்கள் உள்பட 116 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விருத்தாசலம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது கொழை கிராமத்தை சேர்ந்த 116 பேரும் மாஜிஸ்திரேட்டு அறிவு முன்னிலையில் ஆஜரானார்கள்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு அறிவு, விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். அப்போது 116 பேரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சித்தாளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 61). என்.எல்.சி.யில் ஊழியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் சித்தாளிகுப்பத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வீட்டின் ஒரு பகுதியில் வெங்கடாசலம், அவரது மனைவி சரோஜா படுத்து தூங்கினர். மற்றொரு அறையில் அவரது மகன் இளங்கோ, மருமகள் காயத்திரி, பேரன்கள் கார்த்திக், ஆனந்த் ஆகியோர் படுத்திருந்தனர்.
நள்ளிரவில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்தனர். வெங்கடாசலம் தூங்கி கொண்டிருந்த அறையின் வெளிபக்க கதவை பூட்டினர். இதையடுத்து மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்தனர். அதில் இருந்த ரூ.33 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்த வெங்கடாசலம் கதவு பூட்டியிருப்பதை கண்டார். பின்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளைபோயிருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசில் வெங்கடாசலம் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு கலை செல்வன், இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
கொள்ளையர்கள் பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் குறிஞ்சிப்பாடி மற்றும் பல்வேறு பகுதிகளில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து ஆறுமுகம் என்ற பக்தருக்கு மிளகாய் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அவர் கோவில் முன்பு கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கையை விட்டு வடையை சுட்டெடுத்தார். அப்போது பக்தர்கள் சரணகோஷம் எழுப்பி அம்மனை தரிசித்தனர். கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கையால் பக்தர் வடையை சுட்டெடுத்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
கொதிக்கும் எண்ணெய் சட்டியில் இருந்து பக்தர் ஆறுமுகம் வெறும் கையால் வடையை சுட்டெடுத்ததை படத்தில் காணலாம்.
நெல்லிக்குப்பம்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருமானிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி அனுராதா. இவர்களது மகள் ஹரினி(வயது 14). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கண்ணன் சமீபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து அனுராதா தனது மகள் ஹரினி மற்றும் தாய் பிரேமா, தந்தை சதாசிவம் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு அனுராதா குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணியளவில் 2 மர்ம வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அந்த வாலிபர்கள் தூங்கிக் கொண்டிருந்த அனுராதாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். பின்னர் ஹரினி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியையும் பறிக்க முயன்றனர். தூக்கத்தில் இருந்த ஹரினி திடுக்கிட்டு எழுந்தார்.
தங்கசங்கிலியை பறிக்க முயன்ற வாலிபர்களை தடுக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ஹரினியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். அவர் அபயக்குரல் எழுப்பினார். இதனால் கொள்ளையர்கள் ஹரினியின் கழுத்தில் கத்தியால் குத்தினர். இதில் அவர் காயம் அடைந்தார்.
இதையடுத்து ஹரினி அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை கொள்ளையர்கள் பறித்தனர். சத்தம் கேட்டு பிரேமாவும், சதாசிவமும் எழுந்து வந்தனர். ‘திருடன் திருடன்’ என்று சத்தம் போட்டனர். உடனே கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க வழியாக தப்பி ஓடினர்.
கொள்ளையர்கள் பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கே திரண்டு வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க விரட்டி சென்றனர். அதற்குள் அவர்கள் கரும்பு தோட்டத்துக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
நகைபறிப்பு குறித்து நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கொள்ளையர்கள் குறித்து மாணவி ஹரினியிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் கொள்ளையர்கள் முகத்தில் கருப்பு துணி கட்டியிருந்தனர் என்று கூறினார். எனவே முகமூடி கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
முகமூடி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்வம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28-ந்தேதி கிளி வாகனத்திலும், 29-ந்தேதி பூதவாகனத்திலும், 30-ந்தேதி கிளி மற்றும் பல்லக்கிலும், 31-ந் தேதி யானை வாகனத்திலும், 1-ந்தேதி கமலம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்திலும், 2-ந்தேதி வெள்ளி அன்ன வாகனத்திலும், 3-ந்தேதி குதிரை வாகனத்திலும், சாமி வீதியுலா நடந்தது.
9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக மூலவருக்கும், அம்மனுக்கும் காலையில் பால், தயிர், இளநீர், பன்னீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதணை நடைபெற்றது.
தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத தேரினை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து நேற்று இரவு வெளி உற்சவம் நடந்தது. இன்று காலையில் தீர்த்தம் கொடுத்தல் உபயமும், இரவு அம்மன் ஸ்படிக பல்லக்கில் ஊர்வலம் நடக்கிறது. 11-ம் நாள் திருவிழா நாளை (6-ந் தேதி) அதிகாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் விருத்தகிரீஸ்வரருக்கும் சமேத விருத்தாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சியும் அன்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கருணாகரன், உதவி ஆணையாளர் ஜோதி ஆகியோர் செய்து வருகின்றனர்.
கடலூர் வன்னியர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி(வயது 63). வியாபாரி. கடலூர் பஸ் நிலையம் அருகே கடை வைத்துள்ளார்.
வெளிநாட்டு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். சென்னைக்கு சென்று வெளிநாட்டுப் பொருட்களை அவர் வாங்கி வருவது வழக்கம்.
அதன்படி இன்று காலை 7.30 மணிக்கு கடலூர் பஸ்நிலையத்துக்கு ரூ.1 லட்சம் பணத்துடன் வந்தார். சென்னை செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறி அமர்ந்தார். அப்போது திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இதைபார்த்த கண்டக்டர் மற்றும் பொதுமக்கள் அவரை பஸ்சில் இருந்து இறக்கி பஸ்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரைபார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சென்றுவிட்டனர்.
புறக்காவல் நிலையத்தில் மயங்கிய நிலையிலேயே முகமது அன்சாரி வெகுநேரம் இருந்தார். அப்போது அவரது மகள் நூர் செல்போனில் பேசினார். அதை எடுத்து பேசிய புறக்காவல் நிலைய போலீசார் முகமது அன்சாரி மயங்கிய நிலையில் இருப்பதை கூறினர்.
உடனே அவர் வன்னியர்பாளையத்தில் இருந்து ஆட்டோவில் அங்கு வந்தார். முகமது அன்சாரியை ஆட்டோவில் ஏற்றி மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே முகமது அன்சாரி மாரடைப்பால் இறந்துவிட்டார்.
இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புறக்காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட முகமது அன்சாரியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு உடனடியாக கொண்டு சென்று இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
முகமது அன்சாரி மகள் தற்செயலாக செல்போனில் தனது தந்தையிடம் தொடர்பு கொண்டதன் மூலம் அவர் நெஞ்சுவலியால் துடித்தது அவருக்கு தெரியவந்தது. அவர் விரைந்து வந்து தனது தந்தையை காப்பாற்ற ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனாலும் முகமது அன்சாரி இறந்து விட்டார்.
1 மணிநேரமாக புறக்காவல் நிலையத்தில் முகமது அன்சாரி உயிருக்காக போராடி உள்ளார். நெஞ்சுவலியால் துடித்துள்ளார். அவரை காப்பற்ற நட வடிக்கை எடுக்காமல் இருந்த போலீசாரின் செயல் கண்டிக்கதக்கது. போலீசாரின் அலட்சியத்தால் வியாபாரியின் உயிர் போய்விட்டது.
பஸ்நிலையத்திற்கு பல்வேறுபட்ட பொதுமக்கள் வருவார்கள். போலீசார் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அண்ணாகிராமம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் எழுமேடு எம்.ஜி.ஆர்.திடலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கிளை செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, ஒன்றியக்குழு தலைவர் சுந்தரி முருகன், துணைத்தலைவர் எம்.சி.சம்பந்தம், ஒன்றிய துணைச்செயலாளர் செல்வராசு, பேரூராட்சி செயலாளர்கள் கனகராஜ், அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் என்.டி.கந்தன் வரவேற்று பேசினார்.
கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத், கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் டாக்டர் கவிதா கிருஷ்ண மூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் தேவசகாயம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பெருமாள் ராஜா, நகர செயலாளர்கள் தாடி முருகன், சவுந்தர் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழ்நாட்டில் வரி இல்லாத பட்ஜெட்டை அளித்தவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. இந்த பட்ஜெட்டை பற்றி குறைகூற தி.மு.க. வுக்கு அருகதை இல்லை. உலக நாடே வியக்கும் தலை சிறந்த முதல்வராக ஜெயலலிதா திகழ்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருபவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா.
அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றிபெற்று கடலூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.
அண்ணாகிராம ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அண்ணாகிராமம் ஒன்றியத்தில் 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி.
முன்னாள் இலக்கிய அணி துணைச் செயலாளர் கோபு, மாவட்ட பேரவை துணைச் செயலாளர் கே.எம்.நாகபூஷணம், மாவட்ட நிர்வாகிகள் கோதண்டம், திருமலைராஜா, மண்ணாங்கட்டி, ஒன்றிய நிர்வாகிகள் ஜெகநாதன், லட்சுமி காந்தன், ஏழுமலை, லதாமனோகர், ஆத்ம குழு தலைவர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.
பண்ருட்டி நகர அ.தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் தாடி முருகன் தலைமை வகித்தார். நகரசபை தலைவர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நடிகை ஆர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் கடவுள் தந்த சந்தர்ப்பம். எல்லோரும் மக்களிடம் டிராமா போட்டனர். யார் டிராமாவும் எடுபட வில்லை.
6-வது முறையாக ஜெயலலிதா அரியணை ஏறினார். புரட்சி தலைவி மீண்டும் முதல்வரானார். இந்த ஐந்தாண்டு மிகவும் முக்கியமானது. கழகத்தையும் இரட்டை இலை சின்னத்தையும் தந்த வள்ளல் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டில்தான் கொண்டாட உள்ளோம்.
ஏழை எளிய மக்களுக்கு நல்ல பல திட்டங்களை தந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நமது முதல்வரை பாராட்டாமல் தினமும் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்கின்றனர்.
தமிழக மக்களுக்கு நன்மை செய்வது எதிர் கட்சிகள் நோக்கம் இல்லை. தினமும் ஏதாவது அமளி, துமளி செய்து வெளியே வந்து விட வேண்டும் என்று செயல்படுகின்றனர். பொறுப்பேற்ற மறு நாளில் மக்களுக்கு யோசித்து நல்ல பட்ஜெட் வழங்கி உள்ளார்.
ஏழைகளுக்கு 10 லட்சம் வீடு, மாற்று திறனாளிகளுக்கு 3 ஆயிரம் மோட்டார் சைக்கிள் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி மகளிர் விவசாயிகள் இப்படி பலதரபட்ட மக்களின் நலன் கருதி நல்ல நிதிநிலை அறிக்கை தந்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் எம்.சி.சம்பத், எம்.எல். ஏ.சத்யா பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நகர அவைத் தலைவர் சேவல் ராஜதுரை வரவேற்று பேசினார். முடிவில் சீனுவாசன் நன்றி கூறினார்.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் கட்சி பிரமுகர்கள் யாராக இருந்தாலும் பொது இடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும். சசிகலா புஷ்பா எம்.பி. விவகாரம் அருவருக்கத்தக்கது. பொதுஇடத்தில் ஆண் நபரின் கன்னத்தில் அறைந்தது தவறு. ஆண், பெண் யாராக இருந்தாலும் பொதுஇடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்துகிறது.
சசிகலா புஷ்பா அவரது கட்சியைப் பற்றி குறை கூறுவது. உள்கட்சி விவகாரம் ஆகும். கட்சி தலைமை தான் அவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது.
சசிகலா புஷ்பா பாராளுமன்றத்தில் பேசிய கருத்தின் உள்நோக்கம் தெரியாமல் அதுபற்றி கருத்துக்கூற இயலாது. அவர் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டால் கண்டிப்பாக அவருக்கு பாதுகாப்பு கொடுப்பது பற்றி பாரதிய ஜனதா அரசு முடிவு செய்யும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது பற்றி பாரதிய ஜனதா பயிற்சியாளர் பயிற்சி முகாம் 234 சட்டசபை தொகுதிகளிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற சட்டசபை தொகுதிகளிலும் இந்த பயிற்சி முகாம் நடைபெறும்.
இதில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு ஆற்றிய செயல்பாடுகள் குறித்தும் விளக்கமாக பயிற்சி அளிக்கப்படும். இந்த குருபெயர்ச்சி மற்றும் அனைத்து பெயர்ச்சிகளும் பாரதிய ஜனதா கட்சிக்கு சிறப்பாக இருக்கும்.
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை வரவேற்கிறேன்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள ஆதிவராக நல்லூரைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவரது மனைவி கருணாவதி(40).
கருணாவதி தன்னுடைய வீட்டில் காளான் சமைத்திருந்தார். இதனை கருணாவதியும், அவருடைய மகன்கள் உதயக்குமார்(18), ராஜ்குமார்(13), மகள் தேவிகா(16) ஆகிய 4 பேரும் சாப்பிட்டனர்.
சிறிது நேரத்தில் 4 பேருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டு மயங்கினர். அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு காளான் சாப்பிட்டு வாந்தி பேதி ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி நகர அ.தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் தாடி முருகன் தலைமை வகித்தார். நகரசபை தலைவர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நடிகை ஆர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் கடவுள் தந்த சந்தர்ப்பம். எல்லோரும் மக்களிடம் டிராமா போட்டனர். யார் டிராமாவும் எடுபடவில்லை.
6-வது முறையாக ஜெயலலிதா அரியணை ஏறினார். புரட்சி தலைவி மீண்டும் முதல்வரானார். இந்த ஐந்தாண்டு மிகவும் முக்கியமானது. கழகத்தையும் இரட்டை இலை சின்னத்தையும் தந்த வள்ளல் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டில்தான் கொண்டாட உள்ளோம்.
ஏழை எளிய மக்களுக்கு நல்ல பல திட்டங்களை தந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நமது முதல்வரை பாராட்டாமல் தினமும் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்கின்றனர்.
தமிழக மக்களுக்கு நன்மை செய்வது எதிர் கட்சிகள் நோக்கம் இல்லை. தினமும் ஏதாவது அமளி, துமளி செய்து வெளியே வந்து விட வேண்டும் என்று செயல்படுகின்றனர். பொறுப்பேற்ற மறுநாளில் மக்களுக்கு யோசித்து நல்ல பட்ஜெட் வழங்கி உள்ளார்.
ஏழைகளுக்கு 10 லட்சம் வீடு, மாற்று திறனாளிகளுக்கு 3 ஆயிரம் மோட்டார் சைக்கிள் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி மகளிர் விவசாயிகள் இப்படி பலதரபட்ட மக்களின் நலன் கருதி நல்ல நிதிநிலை அறிக்கை தந்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் எம்.சி.சம்பத், எம்.எல். ஏ.சத்யா பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நகர அவைத் தலைவர் சேவல் ராஜதுரை வரவேற்று பேசினார். முடிவில் சீனுவாசன் நன்றி கூறினார்.
சிதம்பரம்:
சிதம்பரத்தை அடுத்துள்ள சேத்தியாதோப்பு அருகே பாழ்வாய்க்கால் என்ற பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் வெய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ஸ்ரீதரன் (வயது 15) 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஸ்ரீதரன் வகுப்பறையில் சிரித்ததாக கூறப்படுகிறது. எனவே வகுப்பு ஆசிரியர் புகார் தெரிவிப்பதற்காக தாளாளரின் அறைக்கு சென்றார். அங்கு அவர் இல்லை. தாளாளரின் மகன் சுஜின் இருந்தார்.
அவரிடம் வகுப்பு ஆசிரியர் புகார் செய்தார். உடனே மாணவன் ஸ்ரீதரனை அழைத்து வர கூறினார்.
அதன்படி வகுப்பு ஆசிரியர் ஸ்ரீதரனிடம், “உன்னை தாளாளர் மகன் கூப்பிடுகிறார். அவரை பார்த்து வா” என்று கூறி அனுப்பி வைத்தார்.
அறைக்குள் சென்றவுடன் சுஜின் அறைக்கதவை மூடினார். பின்னர் மாணவன் ஸ்ரீதரனை அவர் தாக்கியதாக தெரிகிறது. இதில் ஸ்ரீதரனுக்கு கால் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது.
அத்துடன் நிறுத்தாமல் அந்த மாணவனிடம், சுஜின், இங்கு நடந்த விஷயத்தை வெளியே கூறக்கூடாது. அப்படி மீறி சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது.
இதனால் அச்சம் அடைந்த மாணவன் தனது பெற்றோரிடம் இது பற்றி தகவல் தெரிவிக்காமல் இருந்தார்.
தனது மகனின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கண்ட பெற்றோர் அவனை அழைத்து என்ன ஏது? என்று விசாரித்தனர். அப்போது ஸ்ரீதரன் பள்ளியில் நடந்த விவரத்தை கூறினார்.
இதையடுத்து பெற்றோர் ஸ்ரீதரனை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து ஒரத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து மாணவன் கூறும்போது, “பள்ளியில் நான் சிரிக்கவில்லை. என் பின்னால் இருந்த மாணவர்கள் தான் சிரித்தார்கள். ஆனால், என்னை வகுப்பு ஆசிரியர் திட்டினார்.
அதோடு விட்டுவிடாமல் தாளாளர் மகனிடம் புகார் கூறியதால் அவரும் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் என் பெற்றோரிடம் எந்த தகவலையும் நான் கூறவில்லை. எனது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் என்னிடம் விசாரித்ததால் நான் பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறினேன்” என்றார்.
பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்தி அவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






