என் மலர்
செய்திகள்

கடலூர் அருகே முத்து மாரியம்மன் கோவில் விழா: கொதிக்கும் எண்ணெயில் இருந்து வடையை கையால் எடுத்த பக்தர்
கடலூர் அருகே முத்து மாரியம்மன் கோவில் விழாவில் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கையை விட்டு வடையை சுட்டெடுத்தார்.
கடலூர் அருகேயுள்ள பில்லாலிதொட்டி கிராமத்தில் பிரச்சித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் உற்சவம் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான செடல் உற்சவம் கடந்த 2-ந்தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து ஆறுமுகம் என்ற பக்தருக்கு மிளகாய் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அவர் கோவில் முன்பு கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கையை விட்டு வடையை சுட்டெடுத்தார். அப்போது பக்தர்கள் சரணகோஷம் எழுப்பி அம்மனை தரிசித்தனர். கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கையால் பக்தர் வடையை சுட்டெடுத்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
கொதிக்கும் எண்ணெய் சட்டியில் இருந்து பக்தர் ஆறுமுகம் வெறும் கையால் வடையை சுட்டெடுத்ததை படத்தில் காணலாம்.

Next Story