என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் அ.தி.மு.க.வின் இரும்புக்கோட்டை என்பதை உள்ளாட்சி தேர்தலில் நிரூபிக்க வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு
    X

    கடலூர் அ.தி.மு.க.வின் இரும்புக்கோட்டை என்பதை உள்ளாட்சி தேர்தலில் நிரூபிக்க வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

    உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றிபெற்று கடலூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.சி. சம்பத் பேசினார்.
    நெல்லிக்குப்பம்:

    அண்ணாகிராமம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் எழுமேடு எம்.ஜி.ஆர்.திடலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கிளை செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, ஒன்றியக்குழு தலைவர் சுந்தரி முருகன், துணைத்தலைவர் எம்.சி.சம்பந்தம், ஒன்றிய துணைச்செயலாளர் செல்வராசு, பேரூராட்சி செயலாளர்கள் கனகராஜ், அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் என்.டி.கந்தன் வரவேற்று பேசினார்.

    கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத், கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் டாக்டர் கவிதா கிருஷ்ண மூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் தேவசகாயம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பெருமாள் ராஜா, நகர செயலாளர்கள் தாடி முருகன், சவுந்தர் ஆகியோர் பேசினார்கள்.

    கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் வரி இல்லாத பட்ஜெட்டை அளித்தவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. இந்த பட்ஜெட்டை பற்றி குறைகூற தி.மு.க. வுக்கு அருகதை இல்லை. உலக நாடே வியக்கும் தலை சிறந்த முதல்வராக ஜெயலலிதா திகழ்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருபவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா.

    அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றிபெற்று கடலூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.

    அண்ணாகிராம ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அண்ணாகிராமம் ஒன்றியத்தில் 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி.

    முன்னாள் இலக்கிய அணி துணைச் செயலாளர் கோபு, மாவட்ட பேரவை துணைச் செயலாளர் கே.எம்.நாகபூ‌ஷணம், மாவட்ட நிர்வாகிகள் கோதண்டம், திருமலைராஜா, மண்ணாங்கட்டி, ஒன்றிய நிர்வாகிகள் ஜெகநாதன், லட்சுமி காந்தன், ஏழுமலை, லதாமனோகர், ஆத்ம குழு தலைவர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.
    Next Story
    ×