என் மலர்
கடலூர்
நெய்வேலி அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள நாச்சிவெள்ளையன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 18). விருத்தாசலம் கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜேஸ்வரி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் வயிற்றுவலி தாங்காமல் ராஜேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் அருகே தீபாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் நேற்று பேனர் வைத்தனர். அதில் அ.தி.மு.க.வின் தலைமை ஏற்க தீபா வரவேண்டும் என்று குறிப்பட்டுள்ளனர்.
நெல்லிக்குப்பம்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் அ.தி.மு.க.பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்றதை வரவேற்று 6 இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பேனர்களை நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மமனிதர்கள் கிழித்து எடுத்து சென்று விட்டனர்.
இந்தநிலையில் நெல்லிக்குப்பம் அண்ணாசிலை அருகே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் நேற்று பேனர் வைத்தனர். அதில் அ.தி.மு.க.வின் தலைமை ஏற்க தீபா வரவேண்டும் என்று குறிப்பட்டுள்ளனர்.
தீபாவுக்கு ஆதரவாக பேனர் வைக்கப்பட்டுள்ளதால். அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவிலில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் வருகிற 8-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராக சாமி கோவில் உள்ளது. இது வைணவத்தலங்களில் பிரசித்திபெற்றதாகும். இங்கு கடந்த 2012-ம் ஆண்டு கார்த்திகை மாதம் திருப்பணி தொடங்கியது. அரசு நிதி மற்றும் பக்தர்கள் வழங்கிய நன்கொடை மூலமாக ரூ.6 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றன.
திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 13.8.2016 பங்குனி 5-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
4 வருடங்கள் ஆனதால் கடந்த 4 ஆண்டாக சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறவில்லை.
தற்போது மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு வருகிற 8-ந்தேதி (ஞாயிறு) காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.
4 ஆண்டுக்குப் பிறகு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சொர்க்க வாசல் திறப்பு விழாவில் கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

சிதம்பரம் அருகே கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்ததில் மீன்பிடிக்க சென்ற மீனவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம்:
சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள ரெட்டியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 53). அதே பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (47). 2 பேரும் மீனவர்கள்.
இன்று அதிகாலை ராமமூர்த்தியும், நடராஜனும் ரெட்டியார்பேட்டை பகுதியில் இருந்து பைபர் படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். சிறிது தூரம் சென்ற போது கடல் சீற்றமாக இருப்பது தெரியவந்தது. உடனே 2 பேரும் கரைக்கு திரும்ப முடிவு செய்தனர்.
அந்த சமயத்தில் கடல் சீற்றம் அதிகமானதால் பைபர் படகு கவிழ்ந்தது. இதில் ராமமூர்த்தி மற்றும் நடராஜன் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். நடராஜன் நீந்தி கரைக்கு திரும்பினார். ஆனால் ராமமூர்த்தி கடல் அலையில் சிக்கி நீந்தமுடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார். சிறிது நேரத்தில் ராமமூர்த்தியின் உடல் புதுச்சத்திரம் கடற்கரையில் ஒதுங்கியது.
தகவல் அறிந்த புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராம மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மீன்பிடிக்க சென்ற மீனவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்து.

சம்பளம் வழங்கக்கோரி இன்று 3-வது நாளாக அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலையை புறக்கணித்து விட்டு பூமாகோவில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ஏற்றது.
இதையடுத்து ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாத இறுதியில் வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் டிசம்பர் மாத சம்பளம் இதுவரை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 12,500 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். சம்பளம் வழங்கப்படாததால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உனடியாக சம்பளம் வழங்கக்கோரி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பணிகளை புறக்கணித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நேற்று 2-வது நாளாக வேலையை புறக்கணித்து விட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமாகோவில் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இன்று 3-வது நாளாகவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலையை புறக்கணித்து விட்டு பூமாகோவில் முன் திரண்டனர். அரசு உடனடியாக சம்பளம் வழங்கக்கோரி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஆசிரியர்கள் ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரியில் உள்ள மாணவ-மாணவிகள் கல்லூரியில் இருந்து புறப்பட்டு வீடுகளுக்கு சென்றனர்.

உலகப்புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகப்புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உற்சவ ஆச்சாரியார் நடராஜ ரத்தின தீட்சிதர் காலை 7.20 மணிக்கு கொடியேற்றினார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து காலை பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. வருகிற 6-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெரு வடைச்சான் வீதி உலாவும், 7-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலாவும், 8-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது.
9-ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலா நடைபெறுகிறது.
10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.
11-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி அம்மனுக்கும், நடராஜருக்கும் மகா அபிஷேகம் நடைபெறும்.
காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலாவும் நடைபெறுகிறது. இதை யடுத்து பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
12-ந் தேதி பஞ்ச மூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் பட்டுரத்தின தீட்சிதர், துணைச் செயலாளர் நடராஜ தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.
விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேத்தியாத்தோப்பில் ஆசிரியை திட்டியதால் கடத்தல் நாடகமாடிய 10-ம் வகுப்பு மாணவியை போலீசார் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் நேற்று இரவு 8 மணிக்கு 15 வயது சிறுமி அழுதுகொண்டிருந்தார்.
அந்த பகுதியில் உள்ளவர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்தபோது, தன்னை 4 பேர் கடத்தி வந்ததாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்துவிட்டதாகவும் கூறினார்.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் அந்த சிறுமியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த சிறுமி போலீசாரிடம் கூறியதாவது:-
என் பெயர் திலகவதி, என் தந்தை பெயர் கண்ணையன், தாய் பெயர் லட்சுமி. நாங்கள் சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருகிறோம்.
அமிஞ்சிக்கரையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான் 10-வகுப்பு படித்து வருகிறேன். நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றேன்.
அரும்பாக்கம் பஸ்நிறுத்தத்தில் நான் நின்று கொண்டிருந்தபோது என் அருகே சிவப்பு நிற கார் வந்து நின்றது. காரில் டிரைவர் மற்றும் 3 பேர் இருந்தனர். அவர்கள் திடீரென்று கீழே இறங்கினர்.
என் முகத்தில் வெள்ளை நிற கைக்குட்டையால் அமுக்கினர். இதில் நான் மயக்கம் அடைந்தேன். உடனே என்னை காரில் ஏற்றிக்கடத்தி சென்றனர். இரவு 8 மணியளவில் ஒரு இடத்தில் கார் நின்றது.
அப்போது எனக்கு மயக்கம் தெளிந்தது. நான் விழித்து பார்த்தபோது காரில் மேலும் 4 பெண்கள் இருப்பதை பார்த்தேன். காரில் என்னை கடத்தி வந்தவர்கள் காரில் இருந்து இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்க சென்றனர். உடனே நான் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவந்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார். போலீசார் அவரிடம் கடத்தி வந்த காரின் எண்ணை கேட்டனர். அதற்கு அவர் தெரியாது என்றார்.
மேலும் 4 பெண்கள் அந்த காரில் கடத்தப்பட்டதாக கூறினார். உடனே போலீசார் அவர் கூறியதை நம்பி அனைத்து பகுதிகளிலும் அந்த காரை பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ஆனால் சந்தேகப்படுபடியாக எந்த காரும் சிக்கவில்லை.
பின்னர் திலகவதியிடம் கூடுதலாக விசாரணை நடத்த அனைத்து மகளிர் போலீசில் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அவரிடம் பெண் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரிடமிருந்த பஸ் டிக்கெட்டுகளை பெண் போலீசார் கைப்பற்றினர்.
அந்த டிக்கெட்டு குறித்து விசாரித்தபோது, சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுவைக்கு அவர் பஸ்சில் வந்ததும், அங்கிருந்து சேத்தியாத்தோப்புக்கு வந்திருப்பதும் தெரியவந்தது.
அவர் காரில் கடத்தப்படவில்லை என்றும், காரில் மர்மமனிதர்கள் கடத்தியாக நாடகமாடியதும் தெரிந்தது.
தொடர்ந்து திலகவதியிடம் விசாரித்தபோது சரியாக படிக்காததால் பள்ளி ஆசிரியை திட்டியதால் கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறி சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பாளையசேந்தங்குடி பகுதியை சேர்ந்த தன் மாமாவை பார்ப்பதற்காக பஸ்சில் வந்ததாக கூறினார்.
இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் இரவு 11 மணியளவில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் திலகவதியை போலீசார் ஒப்படைத்தனர்.

விருத்தாசலம் அருகே நெற்பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் சம்பா நெற்பயிர் சாகுபடியை மேற்கொண்டனர். பருவ மழை பொய்த்ததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நெற்பயிர் கருகியதால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள மணவாளநல்லூரைச் சேர்ந்த விவசாயி மான்துரை (வயது 60).
இவர் அதே பகுதியில் உள்ள தனது வயலில் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தார். பருவமழை பெய்யாததால் நெல் விளைச்சல் சரியாக இல்லை. அதிக அளவில் கடன் வாங்கி விவசாயம் செய்திருந்ததால் மான்துரை கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் வயலுக்குச் சென்ற மான் துரை அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார்.
தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மான்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவை டிஸ்மிஸ் செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி:
தமிழக வாழ்வுரிமை கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு தினம், தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் இந்த திட்டம் தோல்வி அடைந்துள்ளது என்பது தெரிய வருகிறது. நாடு முழுவதும் வருமான வரி சோதனைகள் நடந்து வருகின்றது.
இந்த சோதனையின் போது பல நூறு கோடி மதிப்பில் புதிய 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் கோடிக்கணக்கான பணம், நகைகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் அவர் பத்திரிகையாளர்களிடம் இன்னும் தான் தலைமைச் செயலாளராக இருப்பதாக கூறியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை பணிநீக்கம் செய்து 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும், காவிரி நீரை திறந்துவிடாமல் கர்நாடகா அரசு வஞ்சித்து வருவதாலும், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகி உள்ளன. இதுவரை 45 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இறந்த விவசாய குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளின் அனைத்து வகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக அரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,850 அறிவித்துள்ளது. இது போதாது. டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது உள்ள நிலையை சாதகமாக பயன்படுத்தி பா.ஜனதா அரசு கொல்லைபுரம் வழியாக உள்ளே நுழைய திட்டமிடுவது போன்று தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

விருத்தாசலத்தில் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறிய ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பஸ்நிலையத்தின் பின்புறம் தனியார் ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு ஸ்கேன் வசதி உள்ளது. ஸ்கேன் வசதியை பயன்படுத்தி கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று பாலினத்தை கண்டறிந்து கூறி வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதையொட்டி சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் குருநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மவர்மன் முன்னிலையில் ஸ்கேன் சென்டரை ஆய்வு செய்தார்.
அப்போது அந்த ஸ்கேன் சென்டரில் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆய்வின் போது மாநில பாலின தேர்வு தடைச்சட்ட அலுவலக கண்காணிப்பாளர் கமல கண்ணன், கடலூர் சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் மாதவி, விருத்தாசலம் அரசு மருத்துவனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் சாமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
சுகாதாரத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பண்ருட்டி அருகே மாணவன் கொலை வழக்கில் வியாபாரி கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் வியாபாரி அளித்த வாக்குமூலம் குறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பம் காலனியை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன ஜெயபிரகாஷ்(15). என்.எல்.சி. பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
ஜெயபிரகாஷ் கடந்த 23-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அதே பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் நடைபெற்ற தகராறில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த வியாபாரி பழனியப்பனை வலைவீசி தேடிவந்தனர்.
கடலூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டு முரளீதரன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை முடுக்கிவிட்டனர். கொலையாளியை கைது செய்ய தனிப்படை அமைத்தனர்.
தனிப்படை போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். இன்று அதிகாலை பண்ருட்டியிலிருந்து முத்தாண்டிக்குப்பம் செல்லும் வழியில் பழைய பிள்ளையார்குப்பம் அருகே பதுங்கியிருந்த பழனியப்பனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மாணவனை கொன் றது ஏன்? என்பது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அந்த வாக்கு மூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் முத்தாண்டிக்குப்பம் கடை வீதியில் பெட்டிக் கடை வைத்துள்ளேன். இந்த கடையில் அடிக்கடி திருட்டு நடைபெற்றது வந்தது.
ஏராளமான பணம், பொருட்கள் திருட்டு போயின. எனது கடையில் திருடும் நபரை கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 22-ந் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு பின்பக்க வழியாக உள்ளே பதுங்கியிருந்தேன்.
23-ந் தேதி அதிகாலை முத்தாண்டிக்குப்பம் காலனியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற வாலிபர் கடையில் உள்ளே புகுந்து திருட முயன்றார். அவரை கையும் களவுமாக பிடித்தேன்.
என்னிடமிருந்து தப்பி ஓட முயற்சி செய்த போது அவர் என்னை தாக்கினார். நான் தற்காப்புக்காக அருகிலுள்ள கத்தியை எடுத்து அவரை தாக்கினேன். படுகாயம் அடைந்த ஜெயபிரகாஷ் உயிர் இழந்தார்.
இவ்வாறு அந்த வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
மாணவன் கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு கொலையாளியை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்ட பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளீதரன், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் தனிப்படை போலீசாருக்கு கடலூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டு தெரிவித்தார்.

சுனாமி நினைவு தினமான இன்று கடலூர் கடலில் பால் ஊற்றி மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். கடற்கரையோரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மீனவர்கள், பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடலூர்:
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.
இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையோரம் வசித்து வந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
தமிழகத்திலும் சுனாமியின் கோரப்பசிக்கு பலர் இறந்தனர். கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, எம்.ஜி.ஆர்.திட்டு, பில்லுமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சுனாமி காவு வாங்கியது.
தேவனாம்பட்டினத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களை கடல் அலை இழுத்து சென்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுனாமியின் கோரதாண்டவத்தில் 610 பேர் உயிரிழந்தனர்.
எங்கும் சோகமயமாக காட்சியளித்தது. சுனாமி பேரலை தாக்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தமிழக கடலோரங்களில் அதன் சோகநினைவுகள் இன்றும் அகலவில்லை.
டிசம்பர் 26-ந் தேதி சுனாமியால் பலியானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி அருகே மீனவர்கள் திரண்டனர். அங்கிருந்து அவர்கள் கடற்கரைக்கு மவுன ஊர்வலம் சென்றனர்.
பூக்கூடைகளையும், பால்குடங்களையும் ஏந்தியபடி சென்றனர். கண்களில் கண்ணீரையும், நெஞ்சத்தில் சோகத்தையும் சுமந்தபடி ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடற்கரைக்கு சென்ற அவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இறந்தவர்களை நினைத்து பெண்கள் கதறித்துடித்த காட்சி கல் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
சுனாமியில் பலியான தங்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலில் பாலை ஊற்றினர். கூடைகளில் கொண்டுவந்த பூக்களை கடலில் தூவினர்.
பின்னர் கடற்கரையில் 5 நிமிடம் மவுனமாக அமர்ந்து இருந்தனர். சுனாமியில் பலியான தங்களது குடும்பத்தினரை நினைத்து கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர்.
இதையடுத்து கடற்கரையில் சுனாமியில் இறந்தவர்களுக்கு நினைவாக உருவாக்கப்பட்ட நினைவுத்தூண் உள்ள பகுதிக்கு சென்று மலர்வளையம் வைத்து கண்ணீர் சிந்தினர்.
மீனவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர் உள்பட ஏராளமானோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடற்கரை பகுதிகளில் எங்கும் அழுகை குரல் கேட்ட வண்ணம் இருந்தது.
சுனாமியின்போது காரைக்கால் கடற்கரையோரம் வசித்தவர்களும் ராட்சத அலையில் சிக்கி பலியானார்கள். அவர்களின் நினைவாக கடற்கரையில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் புதுவை நிர்வாகம் சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும்.
சுனாமி நினைவு தினமான இன்று புதுவை வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து சுனாமியின் போது இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட நண்டலாறு, பட்டினச்சேரி பகுதியில் அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் கதறி துடித்தது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.