search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புஞ்சை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
    X

    புஞ்சை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

    • சிவகிரி மற்றும் புளியங்குடி வனச்சரக கிராமங்களின் அனைத்து நஞ்சை- புஞ்சை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் சிவகிரியில் நடைபெற்றது.
    • வருகிற 10 -ந்தேதி சிவகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்திட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி மற்றும் புளியங்குடி வனச்சரக கிராமங்களின் அனைத்து நஞ்சை- புஞ்சை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் சிவகிரி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தில் நடைபெற்றது. ராஜசிங்கப்பேரி கண்மாய் நீர்ப்பாசன சங்க தலைவரும், ராயகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான பிச்சாண்டி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடவடிக்கை குழு (நிர்வாகக் குழு தேர்வு) உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.

    ஒருங்கிணைப்பாளராக விநாயகர், கடித தொடர்பாளராக உலகநாதன், நிதி காப்பாளராக ராயகிரி பிச்சாண்டி, செயற்குழு உறுப்பி னர்களாக பகுதிவாரியாக தேவிபட்டணத்தைச் சேர்ந்த தலைமலை, அந்தோணி, சிவகிரி வெங்கடேஷ், பாலசுப்பிரமணியன், மேட்டுப்பட்டி சரவணக்குமார், அருளாட்சி பாண்டி, ஆத்துவழி சமுத்திர பாண்டியன், வாசுதேவநல்லூர் குருசாமி, மாரியப்பன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் விநாய கர் தலைமையில் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் வனவிலங்குகள் (யானை, பன்றி கூட்டங்கள்) விவசாய மகசூல்களை தொடர்ந்து நாசம் செய்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாயம், விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆகியவற்றை பாதுகாக்க வனத்துறை மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி வருகிற 10 -ந்தேதி சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்பாளர் உலகநாதன் நன்றி கூறினார்.

    Next Story
    ×