என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார்.

    கூட்டுறவு சங்கங்களில், பயிர்கடன் வழங்கும்போது, லோக்சபா, சட்டசபை தேர்தல் நேரத்தில், அதிக அளவில் கடன் கொடுக்கும் வகையில், பல விதிமுறைகள் வாய்மொழியாக தளர்த்தப்பட்டு, குறியீட்டை முடிக்க நிர்ப்பந்தம் செய்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், விதிமீறல்கள் எனக்கூறி, பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    இது தொடர்பாக, சங்க செயலாளர்கள், பணியா ளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கை களையும் முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    முன்னதாக, நாமக்கல் நல்லிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இருந்து பணியாளர்களின் கண்டன பேரணி கலெக்டர் அலுவல கம் வரை சென்றது. மாவட்டம் முழுவதும் இருந்து, ஏராளமான சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×