என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம்-நாளை மறுநாள் நடக்கிறது
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த மாதம் 20-ந்தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
- மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரை வலையங்குளம், எழுச்சி மாநாடு திடலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க எழுச்சி மாநாட்டில், நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெருந் திரளாக கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) காலை 10.30 மணிக்கு வண்ணார் பேட்டை ஸ்ரீலட்சுமி காயத்ரி ஓட்டலில் நடை பெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகி கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
எனவே பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






