என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளர் குருசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
- கூட்டத்திற்கு நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளர் (பொறுப்பு) மற்றும் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார்.
- இணைய வழி மூலமாக பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்துவது சம்பந்தமாக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அறிவுரை வழங்கினார்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நெல்லை மின் பகிர்மான வட்டம், தென்காசி கோட்டத்திற்கான மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆய்வு கூட்டம் நெல்லை மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளர் (பொறுப்பு) மற்றும் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் பொதுமக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி மிக விரைவாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஆலோ சனைகளை வழங்கினார்.
மேலும் இணைய வழி மூலமாக பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்து வது சம்பந்தமாக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வுக்கூட்டத்தில் நெல்லை துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் வீரலட்சுமணன், மத்திய அலுவலக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், தென்காசி கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகசுந்தரம் மற்றும் தென்காசி கோட்டத்தை சேர்ந்த உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், உதவி கணக்கு அதிகாரிகள், மதிப்பீட்டு ஆய்வாளர்கள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.